
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு இன்று சந்தித்து பேசினார்.
மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 6 கட்ட வாக்குப்பதிவு ஏற்கனவே நடந்து முடிந்த நிலையில், 7-வது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. 7 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரேதசத்தில் உள்ள 59 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதற்கான பிரசாரம் நேற்று மாலை நிறைவடைந்தது. இந்நிலையில் தில்லியில் உள்ள இல்லத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடு இன்று சந்தித்துப் பேசினார். அப்போது மே 23ல் நடக்க உள்ள எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் உள்ளிட்டவை குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து சந்திர பாபு நாயுடு, உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வர்கள் மாயாவதி, அகிலேஷ் ஆகியோரையும் சந்திக்கிறார்.