சுடச்சுட

  

  கேதார்நாத் குகைக் கோயிலில் தியானத்தில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி

  By ANI  |   Published on : 18th May 2019 05:52 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  modi_kedarnath


  மக்களவைத் தேர்தலின் இறுதிகட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில், கேதார்நாத் கோயிலுக்குச் சென்றுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

  ஓயாமல் ஓடி ஓடி பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி, நாளை தான் போட்டியிடும் வாராணசி தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெறுவதால், இன்று காலை கேதார்நாத் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.

  பிறகு கேதார்நாத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நலத்திட்டப் பணிகள் மற்றும் மேம்பாட்டுப் பணிகள் குறித்தும் அதிகாரிகளிடம் மோடி கேட்டறிந்தார்.

  அதன் பின்னர் உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் உள்ள குகைக் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி அங்கிருந்த குகையில் அமர்ந்து தியானம் செய்தார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai