சுடச்சுட

  


  காத்மாண்டு: உலகின் 5ஆவது மிகப் பெரிய சிகரமான மகாலுவை ஏறிவிட்டு கீழே இறங்கியபோது இந்திய மலையேற்ற வீரர் உயிரிழந்தார்.
  இதுகுறித்து நேபாள சுற்றுலாத் துறை அமைச்சகத்தின் அதிகாரி மீரா ஆசார்யா கூறுகையில்,"கடந்த வியாழக்கிழமை நான்காவது முகாம் வழியாக இறங்கியபோது, நாராயண் சிங் என்ற இந்தியர் உயிரிழந்தார்'என்றார்.
  மேற்கு வங்கத்தைச் சேர்ந்த விப்லப் பைத்யா (48), கண்டல் கரர் (46) ஆகியோர் கஞ்சன்ஜங்கா சிகரத்தில் கடந்த புதன்கிழமை உயிரிழந்தனர்.
  கடந்த சில தினங்களில் இதுவரை 3 இந்தியர்கள் உயிரிழந்துவிட்டனர். சிலி நாட்டைச் சேர்ந்த மலைúற்ற வீரர் ஒருவரும் கடந்த புதன்கிழமை மாலையிலிருந்து காணவில்லை. ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான மலையேற்ற வீரர்கள் நேபாளத்தில் இமயமலையில் உள்ள சிகரங்களை ஏறிச் செல்வார்கள்.ஜூன் மாதத்துடன் வசந்த கால பருவம் முடிவடைகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai