சுடச்சுட

  

  மோடி, அமித்ஷா மீதான தேர்தல் நடத்தை விதி மீறல்: தேர்தல் ஆணையர்கள் இடையே வெடித்தது கருத்து வேறுபாடு

  By PTI  |   Published on : 18th May 2019 01:11 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  election commission


  புது தில்லி: பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா மீதான தேர்தல் நடத்தை விதி மீறல் புகார் மீதான விவகாரத்தில் தேர்தல் ஆணையர்கள் இடையே கருத்து வேறுபாடு வெடித்துள்ளது.

  தேர்தல் பிரசாரத்தின் போது முதன்முறை வாக்காளர்கள், பாகிஸ்தானின் பாலாக்கோட்டில் தாக்குதல் நடத்திய வீரர்களுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்று மோடி கூறியிருந்தார். இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என்று புகார் அளிக்கப்பட்டது.

  இதேப்போல, இந்திய பாதுகாப்புப் படை வீரர்களை மோடியின் படை என்று அமித்ஷா பேசியிருந்ததற்கு எதிராகவும் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

  இவ்விரண்டு புகார்களையும் ஆய்வு செய்த  தேர்தல் ஆணையம், இதில் எவ்வித தேர்தல் நடத்தை விதி மீறல் இல்லை என்று முடிவெடுத்தது. இதேப்போன்ற 8 புகார்களுக்குமே தேர்தல் ஆணையம் பச்சைக்கொடியே காட்டியது.

  இதற்கு காங்கிரஸ் தரப்பில் கடும் கண்டனம் எழுந்தது. தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. 

  இந்த நிலையில், தேர்தல் ஆணையர்களில் ஒருவரான அசோக் லவாசா, இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், எனது கருத்தை ஏற்கப்படாததால், இனி தேர்தல் ஆணையக் கூட்டங்களில் பங்கேற்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

  பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோர் தேர்தல் விதிமுறைகளை மீறி உள்ளனர் என்றும், இது தொடர்பான 6 தேர்தல் விதிமுறை மீறல்களில் எனது கருத்து ஏற்கப்படவில்லை. எனது கருத்துகளை ஏற்றுக் கொள்ளாததால் இனிவரும் தேர்தல் ஆணைய கூட்டங்களில் இனி பங்கேற்கப்போவதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai