
பட்டப்பகலில் துப்பாக்கிச்சூடு நடந்த அதிர்ச்சியூட்டும் விடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் தில்லியில் காரில் சென்று கொண்டிருந்தவரை வழிமறித்த மர்ம கும்பல் அவரை திடீரென துப்பாக்கியால் சுட்டது. இதனால் காரில் இருந்த அந்த நபர் சாலையில் ஓடியுள்ளார்.
இருப்பினும் அவரை துரத்திச் சென்ற அந்த மர்ம கும்பல் துப்பாக்கியால் சுட்டது. இதில் அந்த நபருக்கு பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தில்லியின் ரோஹினி பகுதியில் உள்ள 11-ஆவது செக்டாரில் நடந்த இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது இந்த விடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
#WATCH Delhi: A man was shot at by unknown assailants in Rohini, Sector-11, yesterday. He has been admitted to a hospital in critical condition. pic.twitter.com/Zvrx5hDqBV
— ANI (@ANI) May 18, 2019