சுடச்சுட

  
  Chandrababu_Naidu

   

  தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை சனிக்கிழமை நேரில் சந்தித்தார்.

  மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் 6 கட்ட வாக்குப்பதிவு ஏற்கனவே நடந்து முடிந்த நிலையில், 7-வது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. 

  இந்நிலையில், அடுத்து ஆட்சியமைப்பது தொடர்பாக ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு, தில்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் அவரது இல்லத்தில் சனிக்கிழமை காலை சந்தித்துப் பேசினார். 

  இதையடுத்து முன்னாள் மத்திய அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சரத் பவாரை, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்தித்துப் பேசினார். தில்லியில் அடுத்தடுத்து நடைபெற்ற இந்த இரு முக்கிய சந்திப்புகளும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai