மக்களவைத் தேர்தலின் கடைசி கட்ட வாக்குப்பதிவு: 918 வேட்பாளர்கள்.. 10.17 கோடி வாக்காளர்கள்

17-வது மக்களவைத் தேர்தலின் கடைசி கட்ட வாக்குப்பதிவு மொத்தம் 59 தொகுதிகளில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. 
மக்களவைத் தேர்தலின் கடைசி கட்ட வாக்குப்பதிவு: 918 வேட்பாளர்கள்.. 10.17 கோடி வாக்காளர்கள்


17-வது மக்களவைத் தேர்தலின் கடைசி கட்ட வாக்குப்பதிவு மொத்தம் 59 தொகுதிகளில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. 

17-வது மக்களவைத் தேர்தலின் 7-வது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு 7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் நாளை நடைபெறுகிறது. இதில் மொத்தம் 918 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மொத்தம் 10.17 வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். 

பஞ்சாப் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் தலா 13 தொகுதிகள், மேற்கு வங்கம் 9 தொகுதிகள், பிகார் 8 தொகுதிகள், மத்தியப் பிரதேசம் 8 தொகுதிகள், ஹிமாச்சலப் பிரதேசம் 4 தொகுதிகள், ஜார்கண்ட் 3 தொகுதிகள் மற்றும் சண்டிகர் 1 தொகுதி என மொத்தம் 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 

பிரதமர் மோடி போட்டியிடும் வாராணசி தொகுதியிலும் நாளை தான் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 

2014 மக்களவைத் தேர்தலில் இந்த 59 தொகுதிகளில் 30 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது என்பது நினைவுகூரத்தக்கது. 

மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 23-ஆம் தேதி நடைபெறுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com