பிரக்யாவின் வேட்பு மனுவை ரத்து செய்ய வேண்டும்: ஷீலா தீட்சித்

மகாத்மா காந்தியைச் சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவை "தேசபக்தர்' எனக் கூறியுள்ள போபால் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யா தாக்குரின் வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் ரத்துசெய்ய வேண்டும் என
பிரக்யாவின் வேட்பு மனுவை ரத்து செய்ய வேண்டும்: ஷீலா தீட்சித்

மகாத்மா காந்தியைச் சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவை "தேசபக்தர்' எனக் கூறியுள்ள போபால் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் பிரக்யா தாக்குரின் வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் ரத்துசெய்ய வேண்டும் என தில்லி பிரதேச காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை கூறியது:  மகாத்மா காந்தியைச் சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவை தேசபக்தர் என பிரக்யா தாக்குர் கூறியிருப்பது கண்டனத்துக்குரியது. இதுபோன்ற நபர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடத் தகுதியற்றவர். அவரது வேட்புமனுவை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 2008-ஆம் ஆண்டு மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பிரக்யா தாக்குர், சாத்வி என்று அழைக்கப்படுவதற்கு வெட்கப்பட வேண்டும்.

பிரக்யா தாக்குரின் பேச்சை பாஜக தலைவர்கள் கண்டிக்கவில்லை.  குறிப்பாக, மகாத்மா காந்தி காட்டிய அகிம்சை வழியைக் கடைப்பிடிப்பதாகக் கூறிக் கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி  பிரக்யா தாக்குரின் பேச்சு குறித்து கருத்துத் தெரிவிக்கவில்லை. நாட்டின் விடுதலைப் போராட்ட வீரர்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க ஆளுமைகள் புகழை மங்கச் செய்யும் வகையில் இதுபோன்ற நடவடிக்கைகளை மோடி தலைமையிலான மத்திய அரசு கட்டவிழ்த்துள்ளது. 

குறிப்பாக, காங்கிரஸ் கட்சியுடன் தொடர்புடைய ஆளுமைகளின் மீது இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  பிரக்யா தாக்குரை பாஜக வேட்பாளராக தேர்வு செய்த நரேந்திர மோடியும், அமித் ஷாவும், மகாத்மா காந்திக்கு எதிரான இதுபோன்ற பேச்சுக்கு பொறுப்பேற்க வேண்டும். போபால் தொகுதியில் போட்டியிடும் பிரக்யா தாக்குரின் வேட்பு மனுவைத் திரும்பப் பெற மோடியும், அமித் ஷாவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லையென்றால், அவர்களின் தேசப்பக்தி, தேசியவாதம் பேச்சுகள் வெற்றுப் பேச்சுகளாகிவிடும். பிரக்யா தாக்குரின் பேச்சை காங்கிரஸ் கட்சி கண்டிப்பதுடன், இதுபோன்ற நபருக்கு எதிராக வாக்களித்து, பாஜகவுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறது என்று ஷீலா தீட்சித் கூறினார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com