பிரதமர் மோடியுடன் ஆலோசனை: ஆர்எஸ்எஸ் தலைவர்கள் முடிவு

வரும் 23-ஆம் தேதி மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் பிரதமர் மோடியைச் சந்தித்து ஆலோசனை நடத்த ஆர்எஸ்எஸ்


புது தில்லி: வரும் 23-ஆம் தேதி மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் பிரதமர் மோடியைச் சந்தித்து ஆலோசனை நடத்த ஆர்எஸ்எஸ் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்காக வரும் 21-ஆம் தேதி ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், பையாஜி ஜோஷி, சுரேஷ் சோனி, தத்தாத்ரேயா உள்ளிட்டோர் நாகபுரியில் இருந்து தில்லிக்கு வர இருக்கின்றனர்.

மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்கு ஏற்ப எத்தகைய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது குறித்து முக்கிய ஆலோசனைகள் இந்த சந்திப்பின்போது மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது. முக்கியமாக, தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து ஆர்எஸ்எஸ் தலைவர்கள் மோடிக்கு ஆலோசனை வழங்குவார்கள் என்று தெரிகிறது.

தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்பது இப்போது வரை தெளிவாக கணிக்க முடியாததாகவே உள்ளது. எனினும், பாஜகவுக்கு கடந்த தேர்தல்போல தனிப்பெரும்பான்மை கிடைக்காது, ஆனால், பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்று கூறப்படுகிறது. அத்தகைய சூழல் உருவாகும்போது எவ்வாறு ஆட்சி அமைப்பது என்பது மோடி-ஆர்எஸ்எஸ் தலைவர்கள் சந்திப்பில் முக்கிய விவாதப் பொருளாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனிடையே, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா சொந்த மாநிலமான குஜராத்துக்கு செல்கிறார். அங்கிருந்து மீண்டும் தில்லி திரும்பும் அவரும், பாஜக மூத்த தலைவர் ராம் லாலும் ஆர்எஸ்எஸ் தலைவர்களைச் சந்திப்பார்கள் என்று பாஜக வட்டாரங்கள் கூறியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com