சுடச்சுட

  


  ஹைதராபாத்: தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை போல கையெழுத்திட்டு நில மோசடி செய்ய முயன்ற 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

  ஹைதராபாதின் காச்சிபௌலி பகுதியில் உள்ள நிலத்தை சந்திரசேகர் ராவை போல கையெழுத்திட்டு மோசடி செய்ய சிலர் முயன்றனர். இதுகுறித்து ரெங்கா ரெட்டி மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த கடிதத்தின் மீது சந்தேகப்பட்டு, ராஜேந்திரநகர் வருவாய் கோட்டாட்சியர் சோதனை நடத்தினார்.

  முதல்வர் அலுவலகத்தையும், தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியையும் தொடர்பு கொண்டு அவர் கேட்டார். இதில் அந்த கையெழுத்து போலியானது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

  இதுகுறித்து ஹைதராபாத் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின்பேரில், 3 பேரை ஹைதராபாத் போலீஸார் கைது செய்தனர். மேலும் ஒருவர் தலைமறைவாகி விட்டார். அவரை
  போலீஸார் தேடி வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai