சுடச்சுட

  

  பிராந்திய கட்சிகளின் தலைவர்களுக்கு காங்கிரஸ் அதிக முக்கியத்துவம் அளிக்கும்: அமரீந்தர் சிங்

  By DIN  |   Published on : 19th May 2019 01:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  as


  மலாட்:  கடந்த 2014-ஆம் ஆண்டு தேர்தலை காட்டிலும், 2019ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் வித்தியாசமான நிலைபாட்டை கொண்டுள்ளதாகதாகவும், பிராந்திய கட்சி தலைவர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் என்றும் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். 

  இதுகுறித்து பிடிஐ செய்தியாளர்களுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: கடந்த 5 ஆண்டுகால பாஜக ஆட்சியின்போது,  பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பிராந்திய கட்சிகளின் தலைவர்கள் காங்கிரஸ் கட்சியையும், அதன் கொள்கைகளையும் ஏற்றுக் கொள்ளத் தொடங்கியுள்ளனர். பெரும்பாலான, மாநில பிராந்தியக் கட்சிகளின் தலைவர்கள் மக்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளதால், மக்களின் விருப்பங்களை புரிந்து கொண்டு அவர்கள் பணியாற்றி வருவதை காங்கிரஸ் கட்சியும் உணர்ந்துள்ளது. 

  எனவே, கடந்த 2014ஆம் ஆண்டில் இருந்ததை விட, 2019ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் வித்தியாசமான நிலைபாட்டை கொண்டுள்ளதால், இம்முறை பிராந்திய கட்சிகளின் தலைவர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும். 

  கடந்த 5 ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்த பிரதமர் மோடி ஒரு பொய்யர் என்பதையும், அவர் ஒரு ஏமாற்றுக்காரர் என்பதையும் மக்கள் புரிந்துக் கொண்டு விட்டனர். இந்த 5 ஆண்டு ஆட்சியில் மோடியின் மீதான மயக்கத்திலிருந்து மக்கள் மீண்டு விட்டனர். விவசாயிகளின் பண்ணை வருவாயை இரட்டிப்பாக்குவதாகவும், வேலைவாய்ப்புகளை பெருக்குவதாகவும், ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கிலும் பணம் செலுத்துவதாகவும் வாக்குறுதிகளை கொடுத்த போது அதை மக்கள் உண்மையென நம்பி எதிர்பார்ப்புடன் பாஜகவுக்கு வாக்களித்தார்கள். 

   ஆட்சியில் அமர்ந்ததும், மக்களிடம் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாததால் மக்கள் மோடி மீது அதிருப்தி கொண்டுள்ளனர். 

  மோடியை பிரிவினையின் தலைவர் என்று "டைம்' பத்திரிக்கை விமர்சித்துள்ளது. 

  இதற்கு, பஞ்சாப் பர்காரியில் சீக்கியர்களின் புனிதநூலை கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் பாஜகவினர் அவமதித்த சம்பவத்தை உதாரணமாக கூறலாம். 1984ஆம் ஆண்டு சீக்கியர் கலவரம் குறித்து சாம் பிட்ரோடா கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்பாக அவர் மன்னிப்பு கோரி விட்டதால் அதை பெரிதுபடுத்த தேவையில்லை என்று அவர் தெரிவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai