சுடச்சுட

  

  கேஜரிவாலுக்கான பாதுகாப்பை திரும்பப் பெற வேண்டும்: பாஜக

  By DIN  |   Published on : 19th May 2019 03:40 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Arvind_Kejriwal

  கோப்புப்படம்


  முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியைப் போல் நானும் கொல்லப்படலாம் என்ற கருத்தின் எதிரொலியாக, கேஜரிவாலுக்கான பாதுகாப்பை திரும்பப் பெற வேண்டும் என்று தில்லி பாஜக இன்று (ஞாயிற்றுக்கிழமை) கோரிக்கை விடுத்துள்ளது. 

  தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பஞ்சாபில் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில், "இந்திரா காந்தியைப் போல், எனது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியால் பாஜக என்னை ஒரு நாள் படுகொலை செய்யும். எனது பாதுகாப்பு அதிகாரிகள் பாஜகவுக்கு தகவல் தெரிவிக்கிறார்கள். அவர்கள் (பாஜக) என்னை ஒரு நாள் கொலை செய்வார்கள்" என்று குற்றம்சாட்டியிருந்தார்.

  இதன் எதிரொலியாக, கேஜரிவாலுக்கு அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பை திரும்பப் பெற வேண்டும் என்று தில்லி பாஜக செய்தித் தொடர்பாளர் பிரவீன் ஷங்கர் கபூர் தில்லி காவல் ஆணையர், மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் தில்லி துணை நிலை ஆளுநர் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கபூர் தெரிவிக்கையில், 

  "அரவிந்த் கேஜரிவால் மன்னிப்பு கேட்க கோரி தில்லி போலீஸார் வலியுறுத்த வேண்டும். அவர் மன்னிப்பு கேட்காவிட்டால், முதல்வருக்கு அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பை திரும்பப் பெற வேண்டும். அரவிந்த் கேஜரிவாலின் கருத்தை கேட்ட பிறகு, அவரது முழு பாதுகாப்புக் குழுவும் உளவியல் ரீதியிலான அழுத்தத்தில் இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன். அதனால், அவர்களுக்கு பாதுகாப்பு அளித்து வரும் அதிகாரிகள் அனைவருக்கும் உளவியல் ரீதியிலான ஆலோசனை வழங்க வேண்டும்" என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai