சுடச்சுட

  
  Suraj_Soni_dp

   

  ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சூரஜ் சோனி என்பவர் அங்குள்ள பறவைகளுக்காக சிறப்பு நலத்திட்டத்தை ஏற்படுத்தியுள்ளார்.

  2.0 திரைப்படத்தில் வரும் பக்ஷி ராஜனைப் போன்று ராஜஸ்தானைச் சேர்ந்த சூரஜ் சோனி, தான் ஏற்படுத்திய பறவைகள் நலத்திட்டத்தின் (பக்ஷி ஆவாஸ் யோஜனா) மூலம் ஜெய்ப்பூரில் மட்டும் 800 பறவைக் குடியிருப்புகளை ஏற்படுத்தியுள்ளார். 

  கடும் வெப்பம், குளிர் மற்றும் மழை என எந்த சூழலிலும் பாதிப்படையாமல் அதிகபட்சம் 7 வருடங்களுக்கு நிலைத்திருக்கும் வகையில் இந்த பறவைக் குடியிருப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

  பூனை, பாம்பு உள்ளிட்ட உயிரினங்களால் பறவைகளுக்கு ஏற்படும் இடையூறுகள் தடுக்கும் வகையில் தரைமட்டத்தில் இருந்து சுமார் 20 அடி உயரத்தில் இந்த குடியிருப்புகள் வைக்கப்பட்டுள்ளன.

  அதுமட்டுமல்லாமல் பறவைகளின் தாகத்தை தீர்க்கும் வகையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தண்ணீர் தொட்டிகளும் வைக்கப்பட்டுள்ளன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai