சுடச்சுட

  
  103-year-old_Shyam_Saran_Negi_voted

   

  நாட்டின் முதல் பொதுத் தேர்தலில் முதல்முறை வாக்களித்தவர் தற்போது 32-ஆவது முறையாக வாக்களித்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.

  1951-ஆம் ஆண்டு நாட்டின் முதல் பொதுத்தேர்தல் நடைபெற்ற போது முதல்முறை வாக்காளராக வாக்களித்த ஹிமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஷியாம் சரண் நேகி, தற்போது 68 ஆண்டுகள் கடந்த பின்னரும் அதே உற்சாகத்தோடு தனது 103-ஆவது வயதிலும் வாக்களித்துள்ளார். 

  7-ஆவது மற்றும் இறுதி கட்டத் தேர்தல், ஞாயிற்றுக்கிழமை (மே 19) நடைபெற்று வருகிறது. இதில், ஹிமாச்சலப் பிரதேசத்தின் கல்பா எனும் கிராமத்தில் ஷியாம் சரண் நேகி தனது வாக்கைப் பதிவு செய்தார். இதன்மூலம் அதிகபட்சமாக 32 முறை வாக்களித்தவர் என்ற பெருமையைப் பெற்றார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai