சுடச்சுட

  

  எம்எல்ஏ முனிரத்னா வீட்டு அருகே வெடிவிபத்து: ஒருவர் சாவு

  By DIN  |   Published on : 20th May 2019 01:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கர்நாடக  காங்கிரஸ் எம்எல்ஏ முனிரத்னா வீட்டின் அருகே வெடிவிபத்து நிகழ்ந்ததில், ஒருவர் உயிரிழந்தார்.
  பெங்களூரு ராஜ ராஜேஸ்வரி நகர் சட்டப் பேரவைத் தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ முனிரத்னா. இவரது வீடு வயாலிகாவல் 11-வது பி கிராஸில் 
  உள்ளது. 
  இங்குள்ள முனிரத்னா வீட்டின் அருகே ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் பயங்கரச் சத்துத்துடன் வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது. இதில், முனிரத்னாவின் அலுவலகப் பணியாளர் வெங்கடேஷ் (45) என்பவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
  தகவலின்பேரில் மாநகரக் காவல் ஆணையர் சுனில்குமார், கூடுதல் காவல் ஆணையர் பி.கே.சிங் உள்ளிட்டோர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர். இதையடுத்து,  மோப்ப நாயும் துப்பு துலக்கியது. வெடிகுண்டு நிபுணர்களும் தீவிரமாகச் சோதனை செய்து வருகின்றனர்.
  இதுகுறித்து மாநகர காவல் ஆணையர் சுனில்குமார் செய்தியாளர்களிடம் கூறியது:
  வெடிவிபத்துக்கு காரணம் தெரியவில்லை. ஆனால், வெங்கடேஷ் ஒரு கேனை எடுத்து வந்ததாகவும், அதில் ரசாயனம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் வெடிவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகித்துள்ளோம். உரிய விசாரணைக்கு பிறகு உண்மை நிலைமை தெரியவரும் என்றார்.
  இதுகுறித்து எம்எல்ஏ முனிரத்னா கூறியது:
  வெடிவிபத்து நடந்துள்ளதையடுத்து பல்வேறு வதந்திகள் பரப்பி வருகின்றனர். வதந்திகளுக்கு யாரும் இடம் தர வேண்டாம். 
  உயிரிழந்த வெங்கடேஷ் மிகவும் வேண்டப்பட்டவர். வெடிவிபத்தில் அவர் உயிரிழந்துள்ளது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
  இதுகுறித்து எந்தக் கருத்தையும் கூற விரும்பவில்லை. போலீஸாரின் விசாரணையில் உண்மை நிலைமை தெரியவரும். போலீஸாருக்குத் தேவைப்பட்டால், விசாரணைக்கு உதவவும் தயாராக உள்ளேன் என்றார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai