சுடச்சுட

  

  கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பாலியல் புகார்கள்: தகவல்களை திரட்டுகிறது யூஜிசி

  By DIN  |   Published on : 20th May 2019 02:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ugc

  கல்லூரி, பல்கலைக்கழகங்களில் அளிக்கப்பட்டுள்ள பாலியல் சீண்டல் புகார்கள் தொடர்பான தகவல்களை திரட்ட பல்கலைக்கழக மானியக் குழு (யூஜிசி) முடிவு செய்துள்ளது. இதற்காக அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் தங்களிடம் உள்ள இது தொடர்பான புகார்களை அனுப்பி வைக்க யூஜிசி உத்தரவிட்டுள்ளது.
  இது தொடர்பாக யூசிஜி செயலர் ரஜினீஷ் ஜெயின் கூறியதாவது:
  பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பாலியல் சீண்டல்கள் தொடர்பாக வரும் புகார்களை விசாரிக்க அமைக்கப்பட்ட குழுக்கள், அவர்களிடம் அளிக்கப்பட்ட புகார்கள்,  அந்தப் புகார்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரத்தைக் கேட்டுள்ளோம். இதன்படி மார்ச் 31-ஆம் தேதி வரை கிடைத்துள்ள புகார்கள் தொடர்பான விவரத்தை அளிக்க வேண்டும். ஜூலை 31-ஆம் தேதிக்குள் இந்த விவரங்கள் யூஜிசி-க்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். அதன் பிறகு இந்த விவரங்கள் மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும். முன்னதாக, பாலியல் சீண்டல்கள் தொடர்பாக புகார்களை விசாரிக்க கல்லூரி, பல்கலைக்கழகங்களில் அமைக்கப்பட்ட உள்முக விசாரணைக் குழு தொடர்பான விவரங்கள் கோரப்பட்டது. பாலினரீதியாக பெண்கள் பாரபட்சத்துடன் நடத்தப்படக் கூடாது என்பதும், மாணவிகள், பெண் பணியாளர்கள், பெண் பேராசிரியர்களின் பணியிட பாதுகாப்பை உறுதி செய்வதுமே இந்தக் குழு அமைக்கப்பட்டதன் நோக்கம் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai