சுடச்சுட

  
  saksthikanth

  ஏழுமலையானை தரிசித்த பின் கோயிலை விட்டு வெளியில் வந்த  ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் உள்ளிட்டோர்.

  திருமலையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தார்.
  திரிபுரா மாநில முதல்வர் பிப்லப் குமார் தேவ் மற்றும் ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் உள்ளிட்டோர்  திருமலைக்கு வந்தனர். அவர்கள் ஞாயிற்றுக்கிழமை காலையில் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். தரிசனம் முடித்துத் திரும்பிய அவர்களுக்கு தேவஸ்தான அதிகாரிகள் ஏழுமலையான் பிரசாதம், சுவாமி படம் உள்ளிட்டவற்றை வழங்கினர். 
  அவற்றைப் பெற்றுக் கொண்டு கோயிலை விட்டு வெளியில் வந்த அவர்கள், "தரிசனம் சிறப்பாக அமைந்தது. நாட்டின் நலனுக்காகவும், வளத்திற்காகவும் ஏழுமலையானிடம் பிரார்த்தனை செய்தோம்' என்றுதெரிவித்தனர். 
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai