சுடச்சுட

  
  rahul_smile

  மக்களவைத் தேர்தலில் பெண்களின் பங்களிப்பு சிறப்பாக இருந்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
  மக்களவைத் தேர்தலில் 7-ஆவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிலையில், சுட்டுரையில் (டுவிட்டர்) ராகுல் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
  முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்தத் தேர்தலில் பெண்களின் பங்களிப்பு வெகு சிறப்பாக இருந்தது. வேட்பாளர்களாக களம் கண்டது மட்டுமல்லாது, பெருவாரியான பெண்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை மிகுந்த ஆர்வத்துடன் முன்வந்து செய்து முடித்துள்ளனர். இதன் மூலம் நாட்டின் ஜனநாயகத்தில் நமது தாய்மார்கள், சகோதரிகளின் குரல் ஒங்கி ஒலிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களின் குரல் கண்டிப்பாக கவனிக்கப்பட வேண்டும். 7-ஆவது கட்டத் தேர்தலில் ஆர்வத்துடன் வாக்களித்த தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும் எனது மரியாதையைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ராகுல் கூறியுள்ளார்.
  முன்னதாக, காங்கிரஸ் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், "இறுதிக் கட்டத் தேர்தலில் மக்கள் அனைவரும் பெருவாரியாக முன்வந்து வாக்களிக்க வேண்டும். இது நமது நாட்டை வளப்படுத்துவதற்கும், வலுப்படுத்துவதற்குமான வாய்ப்பு. ஒவ்வொரு வாக்கும் நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கும் சக்தி உடையது. நாட்டில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நியாயம் கிடைத்திடும் வகையில் அனைவரும் வாக்களிக்க வேண்டும்' என்று தெரிவித்திருந்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai