சுடச்சுட

    

    மத்தியப் பிரதேசத்தில் பாஜக தொண்டர் ஒருவர் காங்கிரஸ் நிர்வாகியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
    இந்தூர் மாவட்டம், பலியா கிராமத்தைச் சேர்ந்தவர் நெமிசந்த் தன்வார் (60). தனது வீட்டின் அருகே நெமிசந்த் ஞாயிற்றுக்கிழமை மாலை நின்று கொண்டிருந்தார்.
    அப்போது அங்கு வந்த காங்கிரஸ் நிர்வாகி அருண் ஷர்மா, துப்பாக்கியால் நெமிசந்தை நோக்கி சரமாரியாக சுட்டார். இதில் பலத்த காயமடைந்த நெமிசந்த், அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.
    இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து, மிஸ்ராவை தேடி வருகின்றனர்.
    இந்த சம்பவத்துக்கு பாஜக மாநில தலைவர் ராகேஷ் சிங் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்த கொலை நடைபெற்றிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பாஜக தொண்டரை சுட்டுக் கொன்ற ஷர்மா, மாநில சுகாதாரத்துறை அமைச்சர் துளசிராமுக்கு மிகவும் நெருக்கமானவர் எனவும் ராகேஷ் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai