சுடச்சுட

  

  சந்திரபாபு நாயுடுவின் உற்சாகம் மே 23-ஆம் தேதி வரை தான்: சிவ சேனை

  By DIN  |   Published on : 20th May 2019 11:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  uddhav

   

  ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் உற்சாகம் மற்றும் எதிர்பார்ப்புகள் அனைத்தும் மே 23-ஆம் தேதி வரை தான் என்று சிவ சேனை விமர்சித்துள்ளது.

  இதுகுறித்து அக்கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் பதிவிட்டுள்ளதாவது:

  எதிர்கட்சிகளின் தரப்பில் இருந்து குறைந்தபட்சம் 5 பிரதமர் வேட்பாளர்கள் தயாராக உள்ளனர். எனவே அடுத்து யார் ஆட்சி அமைப்பது என்று அவர்களுக்குள்ளாகவே குழப்பம் உள்ளது.

  பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, ஏற்கனவே குறிப்பிட்டது போன்று 300 இடங்களுக்கும் மேல் வெற்றிபெற்று பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும்.

  எந்த காரணமும் இன்றி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தேவையில்லாமல் அலைகிறார். அவருடைய இந்த உற்சாகமும், எதிர்பார்ப்புகளும் மே 23-ஆம் தேதியுடன் முடிந்துவிடும். அதற்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறோம் என்றிருந்தது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai