சுடச்சுட

  

  ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர், நிதின் கட்கரி 'திடீர்' சந்திப்பு

  By ANI  |   Published on : 20th May 2019 05:49 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Nitin_Gadkari_PTI

   

  தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தொடர்பாக பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான நிதின் கட்கரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

  பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகள் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராவார் என்று குறிப்பிட்டுள்ளது. சிலவற்றில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என்றுள்ளது.

  ஆனால், இந்த முடிவுகள் எதுவும் இறுதியானது கிடையாது. இருப்பினும் இதன் பிரதிபலிப்பு தேர்தல் முடிவுகளில் வெளிப்படும். பிரதமர் மோடியின் தலைமையில் தான் இந்த தேர்தலை சந்தித்துள்ளோம். எனவே மீண்டும் அவரது தலைமையில் தான் ஆட்சி அமையும். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம். 

  கடந்த 5 ஆண்டுகளில் ஏற்படுத்தப்பட்ட வளர்ச்சித் திட்டங்களுக்காக மக்கள் மீண்டும் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைய வேண்டும் என்று விரும்புகின்றனர். இதன் வெளிப்பாடு தான் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் என்றார்.

  இந்நிலையில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உடன் ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் பையன்ஜி ஜோஷி, நாக்பூரில் திங்கள்கிழமை திடீரென சந்தித்துப் பேசினார். பிரதமர் பதவிக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் பெயரும் சமீபகாலங்களில் பரிசீலிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai