சுடச்சுட

  

  பாராக்ளைடிங்கில் வானில் பறந்த போது விபத்து; மரணமடைந்த சுற்றுலா பயணி

  By ENS  |   Published on : 20th May 2019 02:58 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  paragliding


  ஷிம்லா: எந்த சாகசமாக இருந்தாலும் அதில் ஒரு சிறிய ஆபத்தும் நிறைந்தே இருக்கும். அதைத் தாண்டிதான் அந்த சாகசத்தை நாம் செய்ய முடியும்.

  சில நேரங்களில்  அந்த சாகசம் சிலருக்கு ஆபத்தாகவே முடிந்து விடுகிறது. 

  அந்த வகையில் இமாச்சலப் பிரதேசம் குல்லுவில் பாராகிளைடிங் சென்ற பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி வானில் பறந்து கொண்டிருந்த போது கயிறு அறுந்து கீழே விழுந்ததில் மரணம் அடைந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

  உயிரிழந்தவர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த அமன்தீப் சிங் என்பதும், அவர் தனது நண்பர் ஸ்ரிஷ்டி சிந்தியுடன் சுற்றுலா வந்த போது இந்த அசம்பாவிதம் நிகழ்ந்ததும் தெரிய வந்துள்ளது.

  இந்த சம்பவத்தில் பாராகிளைடிங் சென்ற பைலட் ரன்வீர் சிங்கும் காயமடைந்தார். ரன்வீர் சிங்குக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai