சுடச்சுட

  

  தேர்தலுக்குப் பிந்தைய அனைத்து கருத்துக்கணிப்புகளும் தவறு: எதிர்கட்சிகள் விமர்சனம்

  By ANI  |   Published on : 20th May 2019 11:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  shasi,_cbn,_omar

   

  தேர்தலுக்குப் பிந்தைய அனைத்து கருத்துக்கணிப்புகளும் தவறுதான் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் விமர்சித்துள்ளனர். 

  தேர்தலுக்குப் பிந்தைய அனைத்து கருத்துக்கணிப்பு முடிவுகளும் தவறுதான். ஏனென்றால் சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் தான் அதற்கு சாட்சி. எனவே தேவையற்ற விவாதங்களை தவிர்த்து அனைவரும் மே 23-ஆம் தேதி வரை காத்திருப்பது நன்று என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

  தேர்தலுக்குப் பிந்தைய ஒவ்வொரு கருத்துக்கணிப்பு முடிவுகளும் தவறானது. எனவே தொலைக்காட்சிகளை நிறுத்திவிட்டு, சமூக ஊடகங்களில் இருந்து வெளியேறிவிட்டு, மே 23-ஆம் தேதி என்ன நடக்கிறது என்று பார்ப்போம். அதுவரை உலகம் இயங்கிக்கொண்டு தான் இருக்கும் என்று தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஒமர் அப்துல்லா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

  மக்களின் நாடித்துடிப்பை சரியாக கணிக்காமல் தான் இதுபோன்ற தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இதுவரையிலான அதன் முடிவுகளும் தவறாகத் தான் அமைந்துள்ளது. இவை அனைத்து கள நிலவரத்துக்கு எதிரானது. ஆந்திராவில் நிச்சயம் தெலுங்கு தேசம் மீண்டும் ஆட்சியமைக்கும். பாஜக அல்லாத கட்சிகள் இணைந்து மத்தியில் ஆட்சியமைக்கும் என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai