சுடச்சுட

  

  மாயாவதியின் வீட்டில் வரிசைகட்டி நிற்கும் உத்தரப்பிரதேச 'உயர் அதிகாரிகள்' 

  By IANS  |   Published on : 20th May 2019 04:44 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  mayavathi1


  லக்னௌ: உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள், - ஓய்வு பெற்றும் பணி நீட்டிப்புப் பெற்றுள்ள உயர் அதிகாரிகள் - பலரும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியை சந்தித்து வருகிறார்கள், சந்திக்க நேரம் கேட்டுள்ளனர்.

  மிகப்பெரிய பூங்கொத்துகளுடன் அவரைச் சந்தித்து தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி மிகப்பெரிய வெற்றி பெறவும், சிறந்த எதிர்காலத்துக்காக பிரார்த்திப்பதாகக் கூறவும் அவர்கள் காத்திருக்கிறார்கள்.

  பிரசாரம் இல்லாத நாட்களில் எல்லாம் தொடர்ந்து இதுபோன்ற சந்திப்புகளை மாயாவதியின் இல்லம் பார்த்து வந்தது. தொடர்ந்து பார்க்கவிருக்கிறது.

  இது குறித்து வீட்டு பணியாளர்கள் கூறுகையில், இந்த அதிகாரிகள் அனைவரும் மரியாதை நிமித்தமாகவே மாயாவதியை சந்திக்க வருகிறார்கள். இவர்களில் பலரும், மாயாவதி முதல்வராக இருந்த போது அவரிடம் பணியாற்றியவர்கள். தற்போதிருக்கும் சூழ்நிலை குறித்து பலரும் மாயாவதியிடம் கருத்துகளை பரிமாறிக் கொள்கிறார்கள் என்று தெரிவிக்கிறார்கள்.

  தேர்தலுக்கு முந்தைய இந்த சந்திப்புகள் எங்களை மறந்துவிடாதீர்கள் என்பதைப் போன்றவை.

  பகுஜன் சமாஜ் காட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே அவர்களை வாழ்த்துவதில் என்ன தவறு இருக்கிறது என்கிறார் மாயாவதி முதல்வராக இருந்த போது தலைமைச் செயலகத்தில் பணியாற்றிய மூத்த அதிகாரி ஒருவர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai