ஒடிஸா, மேற்கு வங்கத்தின் உதவியுடன் பாஜக 300 இடங்களில்  வெற்றிவாகை சூடும்

ஒடிஸா, மேற்கு வங்கத்தின் உதவியுடன் பாஜக 300 இடங்களில்  வெற்றிவாகை சூடும்

ஒடிஸா, மேற்கு வங்கத்தில் பாஜக மாபெரும் தேர்தல் வெற்றியை பெறவிருப்பதால், இந்த தேர்தலில் 300 இடங்களில் பாஜக வெற்றிவாகை சூடி, மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்பார் என அக்கட்சியின்

ஒடிஸா, மேற்கு வங்கத்தில் பாஜக மாபெரும் தேர்தல் வெற்றியை பெறவிருப்பதால், இந்த தேர்தலில் 300 இடங்களில் பாஜக வெற்றிவாகை சூடி, மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்பார் என அக்கட்சியின் பொதுச்செயலாளரும், மேற்கு வங்க பாஜக தேர்தல் பொறுப்பாளருமான கைலாஷ் விஜய்வர்கியா நம்பிக்கை தெரிவித்தார். 
இந்தூரில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: மேற்கு வங்கத்தில் அரசு இயந்திரமும், போலீஸார், குண்டர்கள் இணைந்து நடத்திய வன்முறை சம்பவங்கள் முதல்வர் மம்தா பானர்ஜியின் சர்வாதிகார போக்கும், கட்சித் தொண்டர்களின் நடவடிக்கைகளும் அந்த மாநில மக்களை பெரிதும் கவலைக்குள்ளாக்கியுள்ளது.
மம்தாவும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவும் பாஜகவுக்கு எதிராக அமைத்து வரும் கூட்டணி முயற்சியானது, மே 23ஆம் தேதி தேர்தல் முடிவுகளுக்கு பிறகு காணாமல் போய்விடும். 
மத்தியப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 29 எம்.பி., தொகுதிகளில் 22இல் காங்கிரஸ் வெற்றி பெறும் என அந்த மாநில முதல்வர் கமல்நாத் கூறியுள்ளார். மக்களவைத் தேர்தல் முடிவு வெளியானப்பின், 22 நாள்களாவது முதல்வர் பதவியில் கமல்நாத் நீடிப்பாரா என்பது தான் தற்போது முன்வைக்கப்படும் கேள்வி. 
ஏனெனில், மத்தியப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தனது தேர்தல் வாக்குறுதியில், நாங்கள் ஆட்சிக்கு வந்த 10 தினங்களுக்குள் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வோம் என்று உறுதியளித்தார். தற்போது, அங்கு காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பேற்று 150 நாள்களாகிய பிறகும் அவர்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. 
இதன் காரணமாக, இப்போதே வாக்கு கேட்கச் சென்ற காங்கிரஸ் எம்எல்ஏக்களை விவசாயிகள் தங்கள் கிராமங்களுக்குள் நுழைய அனுமதிக்கவில்லை. எனவே, மாநிலத்தின் முதல்வரை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் மேலிடம் உள்ளது என்று தெரிவித்தார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com