ஜனநாயக கடமையாற்றிய முதல் வாக்காளர்

இந்தியாவின் முதல் வாக்காளரான சியாம் சரண் நெகி, ஹிமாசலப் பிரதேச மாநிலம், கின்னௌரில் தமது வாக்கை ஞாயிற்றுக்கிழமை பதிவு செய்தார்.
தேர்தலில் தனது வாக்கை பதிவு செய்துவிட்டு, கைவிரலில் வைக்கப்பட்ட அடையாள மையை காட்டும் சியாம் சரண் நெகி.
தேர்தலில் தனது வாக்கை பதிவு செய்துவிட்டு, கைவிரலில் வைக்கப்பட்ட அடையாள மையை காட்டும் சியாம் சரண் நெகி.

இந்தியாவின் முதல் வாக்காளரான சியாம் சரண் நெகி, ஹிமாசலப் பிரதேச மாநிலம், கின்னௌரில் தமது வாக்கை ஞாயிற்றுக்கிழமை பதிவு செய்தார்.
கின்னௌரை சேர்ந்த நெகிக்கு தற்போது 102 வயது ஆகிறது. சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளரான அவர்,  மாண்டி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட கல்பா வாக்குச்சாவடியில் தமது வாக்கை ஞாயிற்றுக்கிழமை பதிவு செய்தார். முன்னதாக, வாக்குச்சாவடிக்கு வந்த நெகிக்கு, நாட்டின் முதல்வர் வேட்பாளர் என்ற காரணத்துக்காக தேர்தல் அதிகாரி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கின்னௌரில் கடந்த 1917ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி நெகி பிறந்தார். சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தல், நாடு முழுவதும் கடந்த 1952ஆம் ஆண்டு நடைபெற்றது.
ஆனால், ஹிமாசலப் பிரதேசத்தில் மட்டும் 5 மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. அப்போது வாக்குச்சாவடி ஊழியராக நியமிக்கப்பட்ட நெகி, தமது வாக்கை காலை 7 மணிக்குச் செலுத்தினார். அந்நேரத்தில் வேறு யாரும் வாக்களித்திருக்கவில்லை. 
இதனால் நெகியே, நாட்டின் முதல் வாக்காளராக கருதப்படுகிறார்.
அன்று முதல் எந்த தேர்தலையும் நெகி புறக்கணித்ததில்லை. பஞ்சாயத்து தேர்தல் உள்ளிட்ட அனைத்து தேர்தல்களிலும் பங்கேற்று நெகி தமது வாக்கை பதிவு செய்து வருகிறார்.
"சனம் ரே' எனும் திரைப்படத்தில் கௌரவ வேடத்திலும் நெகி நடித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com