பாஜக கூட்டணி 400 தொகுதிகளை கைப்பற்றும்: யோகி ஆதித்யநாத் 

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 400க்கும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றும் என்று உத்தரப் பிரதேச மாநில முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
பாஜக கூட்டணி 400 தொகுதிகளை கைப்பற்றும்: யோகி ஆதித்யநாத் 

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 400க்கும் அதிகமான தொகுதிகளை கைப்பற்றும் என்று உத்தரப் பிரதேச மாநில முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில், கோரக்பூரில் யோகி ஆதித்யநாத் தமது வாக்கை ஞாயிற்றுக்கிழமை பதிவு செய்தார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
வரும் 23ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும்போது, மோடி தலைமையில் பாஜக தனித்து 300க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றும். இதுமட்டுமன்றி கூட்டணி கட்சிகளுடன் சேர்த்து, 400க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றும். உத்தரப் பிரதேசத்தில் 74 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கையும் பாஜக எட்டும் என்றார்.
சமாஜவாதி தலைவர் அகிலேஷ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி ஆகியோரை சந்தித்து, மத்தியில் பாஜக அல்லாத அரசு அமைப்பது குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தியிருப்பது குறித்து ஆதித்யநாத்திடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், "ஆந்திரத்தில் தனது செல்வாக்கை சந்திரபாபு நாயுடு இழந்து விட்டார். அகிலேஷும், மாயாவதியும் மக்களால் தோற்கடிக்கப்பட்டவர்கள். மிகப்பெரும்பான்மை பலத்துடன், மத்தியில் மோடி மீண்டும் ஆட்சியமைப்பார்' என்றார்.
தேர்தல் பிரசாரம் முடிந்து, வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிலையில், யோகி ஆதித்யநாத் இவ்வாறு தெரிவித்திருப்பது தேர்தல் நடத்தை நெறிமுறை மீறலா? என்று மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி வெங்கடேஸ்வரலுவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், "இதுவரை எந்த புகாரும் அளிக்கப்படவில்லை. ஒருவேளை புகார் எதுவும் அளிக்கப்படும்பட்சத்தில், இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை கேட்கப்படும். பிறகு அதன் மீது ஆய்வு செய்யப்படும்' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com