பிரதமரிடம் தேர்தல் ஆணையம் சரணடைந்துவிட்டது:  ராகுல் காந்தி

பிரதமர் நரேந்திர மோடியின் கேதார்நாத்-பத்ரிநாத் பயணத்தை முன்வைத்து, தேர்தல் ஆணையத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். மோடி மற்றும் அவரது சகாக்களிடம் தேர்தல் ஆணையம்
பிரதமரிடம் தேர்தல் ஆணையம் சரணடைந்துவிட்டது:  ராகுல் காந்தி

பிரதமர் நரேந்திர மோடியின் கேதார்நாத்-பத்ரிநாத் பயணத்தை முன்வைத்து, தேர்தல் ஆணையத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். மோடி மற்றும் அவரது சகாக்களிடம் தேர்தல் ஆணையம் சரணடைந்துவிட்டதாக அவர் சாடியுள்ளார்.
மக்களவை இறுதிக்கட்ட தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இத்தேர்தலுக்கான பிரசாரம் வெள்ளிக்கிழமை நிறைவடைந்த நிலையில், பிரதமர் மோடி சனிக்கிழமை உத்தரகண்ட் மாநிலத்துக்கு சென்றார். கேதார் நாத் கோயிலில் வழிபட்ட அவர், அங்குள்ள குகையில் 17 மணி நேரம் தியானம் மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து, பத்ரிநாத் கோயிலிலும் அவர் வழிபட்டார். இப்பயண நிகழ்வுகள் அனைத்தும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டதும், செய்தியாளர்களிடம் மோடி பேசியதும் தேர்தல் நடத்தை நெறிமுறை மீறல் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சுட்டுரையில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், "கேதார்நாத்தில் பிரதமர் மோடி தனது நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார். மோடி மற்றும் அவரது சகாக்களிடம் தேர்தல் ஆணையம் சரணடைந்துவிட்டதை, நாட்டு மக்கள் அனைவரும் அறிந்துகொண்டனர். இனிமேல் தேர்தல் ஆணையத்தின் மீது யாருக்கும் அச்சமோ மரியாதையோ இருக்காது' என்று குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், "தேர்தல் ஆணையம், தனது பணிகளை மேற்கொள்ளாமல் உறங்கிக் கொண்டிருக்கிறது என்று இதுவரை குற்றம்சாட்டி வந்தோம். இனிமேல், தனது சுதந்திரத்தையும், அதிகாரத்தையும் தேர்தல் ஆணையம் ஒட்டுமொத்தமாக அடகுவைத்துவிட்டது என கூறலாம்' என்று குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com