சுடச்சுட

  

  இயற்கை வேளாண்மை மேற்கொள்ளும் சிறு விவசாயிகள், தாங்கள் உற்பத்தி செய்யும் உணவுப் பொருள்களுக்குத் தரச்சான்றிதழ் பெறாமல் நேரடியாக சந்தையில் விற்பனை செய்துகொள்ள இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (எப்எஸ்எஸ்ஏஐ) சலுகை அளித்துள்ளது.
  இதன் மூலம், ஆண்டுக்கு ரூ. 12 லட்சத்துக்கும் அதிகமாக வருவாய் ஈட்டும் சிறு விவசாயிகள் பயன்பெற உள்ளனர்.
  இது தொடர்பாக, எப்எஸ்எஸ்ஏஐ திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
  சிறு விவசாயிகள், இயற்கை வேளாண்மை முறையில் உற்பத்தி செய்யும் உணவுப் பொருள்களுக்குத் தரச்சான்றிதழ் பெறாமல், அடுத்த ஆண்டு ஏப்ரல் வரை சந்தையில் நேரடியாக விற்பனை செய்துகொள்ளலாம். விவசாயிகள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனினும், உணவுப் பொருள்களின் தரம் குறித்து மாநில உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்வர். இந்தச் சலுகை தவறான வழியில் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்தும் அவர்கள் ஆய்வு மேற்கொள்வர் என்று அதில் கூறப்பட்டுள்ளது

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai