சுடச்சுட

  

  கடற்படை தளபதி நியமன விவகாரம்: ராணுவ தீர்ப்பாயத்தில் புதிய மனு தாக்கல் செய்கிறார் வர்மா

  By DIN  |   Published on : 21st May 2019 01:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  verma

  கடற்படை தலைமை தளபதியாக கரம்பீர் சிங் நியமிக்கப்பட்ட விவகாரத்தில், ராணுவ தீர்ப்பாயத்தில் புதிய மனுவை துணை தளபதி விமல் வர்மா செவ்வாய்க்கிழமை (மே 21) தாக்கல் செய்யவுள்ளார்.
  இந்திய கடற்படை தலைமை தளபதியாக தற்போது பதவி வகிக்கும் சுனில் லாம்பாவின் பதவிக்காலம் வரும் 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதை கருத்தில் கொண்டு, அந்தப் பதவிக்கு துணை தளபதி கரம்பீர் சிங்கை மத்திய அரசு நியமித்தது.
  இந்திய கடற்படையில், அந்தமான் நிகோபார் படைப்பிரிவு கமாண்டராக இருக்கும் துணை தளபதி வர்மாவே மிகவும் மூத்தவர் ஆவார். பணி மூப்பின் அடிப்படையில், தலைமை தளபதியாக தம்மை மத்திய அரசு நியமிக்காததை எதிர்த்து, ராணுவ தீர்ப்பாயத்தில் வர்மா மனு தாக்கல் செய்தார்.
  அந்த மனு மீது முடிவெடுக்கும்படி, பாதுகாப்பு அமைச்சகத்துக்கு ராணுவ தீர்ப்பாயம் கடந்த மாதம் 25ஆம் தேதி உத்தரவிட்டது.
  அந்த மனுவை ஆய்வு செய்த பாதுகாப்பு அமைச்சகம், அதை கடந்த வாரம் தள்ளுபடி செய்துவிட்டது. 
  அப்போது தலைமை தளபதி பதவிக்கு தகுதியான துணை தளபதிகள் அனைவருடைய பணி திறனும் ஆய்வு செய்யப்பட்டது. அதில் தலைமை தளபதி பதவிக்கு வர்மா பொறுத்தமில்லாதவர் என்ற முடிவு எடுக்கப்பட்டது' எனத் தெரிவித்திருந்தது.
  பாதுகாப்பு அமைச்சகத்தின் இந்த முடிவை எதிர்த்து, தில்லியில் உள்ள ராணுவ தீர்ப்பாயத்தில் வர்மா செவ்வாய்க்கிழமை புதிதாக இன்னொரு மனுவை தாக்கல் செய்யவுள்ளார். இந்தத் தகவலை வர்மாவின் வழக்குரைஞர் அங்கூர் செப்பர் தெரிவித்துள்ளார். 
  அவர் மேலும் கூறுகையில், "ராணுவ தீர்ப்பாயத்தில் வர்மா புதிதாக செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்யவுள்ளார். இதற்கு ஏதுவாக, ஏற்கெனவே தாக்கல் செய்த மனுவை திங்கள்கிழமை திரும்பப் பெற்றார். புதிய மனுவுடன் சேர்த்து, பாதுகாப்பு அமைச்சகத்தின் குறிப்பும் தாக்கல் செய்யப்படவுள்ளது' என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai