சுடச்சுட

  
  NitinGadkari-(2)

  மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான நிதின் கட்கரியை ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொது செயலாளர் சுரேஷ் ஜோஷி திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார். மக்களவைத் தேர்தலுக்கு பிறகு எடுக்கப்பட்ட வாக்கு கணிப்புகள், மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியே மீண்டும் ஆட்சியமைக்க வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கும் நிலையில், இந்த சந்திப்பு நடைபெற்றிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
  மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் உள்ள நிதின் கட்கரி இல்லத்துக்கு சுரேஷ் ஜோஷி திங்கள்கிழமை காலை 11.30 மணிக்கு சென்றார். அங்கு அவர் பிற்பகல் 1 மணி வரை இருந்தார். அந்நேரத்தில் நிதின் கட்கரியும், சுரேஷ் ஜோஷியும் முக்கிய விவகாரம் குறித்து பேசினர். பின்னர் இருவரும் உணவு அருந்தினர். இந்த சந்திப்பு குறித்து நிதின் கட்கரி கூறுகையில், "இது மரியாதை நிமித்தமான சந்திப்புதான்' என்றார். வேறு எதையும் அவர் தெரிவிக்கவில்லை.
  ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்படும் நிதின் கட்கரி, பிரதமருக்கும் தமக்கும் மோதல் நிலவுவதாக ஊடகங்கள் சித்திரிப்பதாக குற்றம்சாட்டியிருந்தார். அதேபோல், மத்திய அமைச்சர் பதவியே போதும், வேறு எந்தப் பதவியின் மீதும் தமக்கு விருப்பம் இல்லை என்று நிதின் கட்கரி குறிப்பிட்டிருந்தார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai