சுடச்சுட

  

  மான் வேட்டை வழக்கு: ஹிந்தி நடிகர், நடிகைகளுக்கு நோட்டீஸ்: ராஜஸ்தான் உயர்நீதிமன்றம்

  By DIN  |   Published on : 21st May 2019 02:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  rajasthan-highcourt

  அரியவகை மான்களை வேட்டையாடியது தொடர்பான வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடுக்கப்பட்ட மனு குறித்து பதிலளிக்கக்கோரி, ஹிந்தி நடிகர் சயீப் அலிகான், நடிகைகள் சோனாலி பிந்த்ரே, தபு, நீலம் கோத்தாரி உள்ளிட்டோருக்கு ராஜஸ்தான் உயர்நீதிமன்ற ஜோத்பூர் கிளை நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.
  ஜோத்பூர் அருகே கடந்த 1998ஆம் ஆண்டில் அரிய வகை மான்களை வேட்டையாடியதாக ஹிந்தி நடிகர்கள் சல்மான் கான், சயீப் அலிகான், நடிகைகள் சோனாலி பிந்த்ரே, தபு, நீலம் கோத்தாரி, கிராமவாசி துஷ்யந்த் சிங் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் விசாரணை நீதிமன்றம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தீர்ப்பு வெளியிட்டது. அதில் சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை  விதிக்கப்பட்டது. எஞ்சியோர் விடுவிக்கப்பட்டனர்.
  இதை எதிர்த்து, ராஜஸ்தான் உயர்நீதிமன்ற ஜோத்பூர் கிளையில் மாநில அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு, உயர்நீதிமன்ற ஜோத்பூர் கிளையில் கடந்த மார்ச் மாதம் விசாரணைக்கு வந்தது.
  அப்போது ஹிந்தி நடிகர் சயீப் அலிகான், நடிகைகள் சோனாலி பிந்த்ரே, தபு, நீலம் கோத்தாரி, துஷ்யந்த் ஆகிய 5 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பி உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது.
  இந்நிலையில், ராஜஸ்தான் உயர்நீதிமன்ற ஜோத்பூர் கிளையில் இந்த மனு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறுகையில், "முந்தைய நோட்டீஸ், சயீப் அலிகான், சோனாலி ஆகியோரிடம் அளிக்கப்படவில்லை. இதை கருத்தில் கொண்டு, 5 பேருக்கும் மீண்டும் புதிதாக நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது' என்றார். அந்த நோட்டீஸில் மேற்கண்ட 5 பேரும், 8 வாரங்களுக்குள் தங்களது பதிலை தாக்கல் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
  முன்னதாக, இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த சல்மான் கான், தனக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து, குற்றவியல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு மீது விசாரணை நடைபெற்று வருகிறது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai