ஜனநாயகத்தின் அடிப்படையை காக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை: பிரணாப் முகர்ஜி

ஜனநாயகத்தின் அடிப்படையை காக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை என்று முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். 
ஜனநாயகத்தின் அடிப்படையை காக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை: பிரணாப் முகர்ஜி

ஜனநாயகத்தின் அடிப்படையை காக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை என்று முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் செவ்வாய்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

ஆங்காங்கே வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடப்பதாக தகவல்கள் வெளியாகிறது. மக்களின் முடிவை யாரும் மாற்றியமைக்கக்கூடாது. வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பாதுகாப்பது இந்திய தேர்தல் ஆணையத்தின் கடமை.

எனவே எந்தவித சந்தேகங்களுக்கும் இடமளிக்காமல் ஜனநாயகத்தின் அடிப்படை உரிமை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம். நாட்டின் அமைப்புகளின் மீது நம்பிக்கையுள்ள ஒருவராக இந்த கோரிக்கையை முன்வைக்கிறேன். அமைப்புகளின் ஊழியர்கள் தான் ஜனநாயகத்தின் கருவியை பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு பிரணாப் முகர்ஜி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com