இந்தியாவின் முதல் பிரதமர் தொடங்கி.. அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி வரை!

1947 ஆம் ஆண்டிலிருந்து, முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு முதல் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி வரை இந்தியா பதினான்கு பிரதமர்களைக் பெற்றுள்ளது. 
இந்தியாவின் முதல் பிரதமர் தொடங்கி.. அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி வரை!

1947 ஆம் ஆண்டிலிருந்து, முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு முதல் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி வரை இந்தியா பதினான்கு பிரதமர்களைக் பெற்றுள்ளது. 

இந்தியாவின் முதல் பிரதமர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த ஜவாஹர்லால் நேரு ஆவார். 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியப் பிரதமராக பதவியேற்ற நேரு, 1964ம் ஆண்டு மே மாதம் அவர் உயிரோடு இருந்த வரை  பிரதமராக பதவி வகித்துள்ளார்.

1964ம் ஆண்டு லால் பகதூர் சாஸ்திரி பிரதமராக தேர்ந்தெடுப்பதற்கு முன்பு வரை இடைக்கால பிரதமராக பதவியேற்றுக் கொண்டார் குல்சாரிலால் நந்தா.

நேருவைத் தொடர்ந்து 1964ம் ஆண்டு லால் பகதூர் சாஸ்திரி பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். 19 மாத காலம் பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரி மாரடைப்பால் மரணம்  அடைந்தார்.

இவரைத் தொடர்ந்து 1966ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையோடு நேருவின் மகள் இந்திரா காந்தி பிரதமரானார். 

1977 ஆம் ஆண்டில், ஜனதா கட்சியின் தலைவர், மொரார்ஜி தேசாய் இந்தியாவின் முதல் காங்கிரசு அல்லாத பிரதமராக பதவியேற்றார்.

இரண்டாவது முறையாக பிரதமர் பதவியேற்ற இந்திரா காந்தி 1984ம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, அவரது மூத்த மகன் ராஜீவ் காந்தி பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.

மிக இளம் வயதில் பிரதமராக பதவியேற்றவர் என்ற பெருமையோடு, பிரதமராக பதவியேற்ற நேரு குடும்பத்தைச் சேர்ந்த 3வது நபர் என்ற பெருமையையு ராஜீவ் பெற்றார். இவரது தலைமையிலான ஆட்சிக் காலத்தையும் சேர்த்து இந்தியாவை நேரு - காந்தி குடும்பத்தினரால் இந்தியா 37 ஆண்டுகள், 303 நாட்கள் ஆளப்பட்டுள்ளது.

1989ஆம் ஆண்டு இந்தியாவின் 7வது பிரதமராக தேசிய முன்னணியின் தலைவர் வி.பி. சிங் பதவியேற்றார். தேவிலால் துணைப் பிரதமராக பதவியேற்றார்.

ஜனதா தளத்தில் பிரிந்து சமாஜ்வாதி ஜனதா கட்சியை (ராஷ்ட்ரிய) உருவாக்கிய சந்திரசேகர் 1990 நவம்பர் 10ல் எட்டாவது இந்திய பிரதமர் ஆனார். 

1991இல் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட பிறகு, காங்கிரஸ் கட்சியின் தலைவராக நரசிம்ம ராவ் தேர்ந்தெடுக்கப்பட்டார். மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று, நரசிம்ம ராவ் பிரதமரானார். 

1996ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்து, பாஜக ஆட்சியமைக்க முடியாத நிலையில் ஐக்கிய முன்னணியின் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைத்து இந்தியாவின் 14வது பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார் தேவே கௌடா.

1997 ல் தேவகௌடா தலைமையிலான ஐக்கிய முன்னணிக்கு வழங்கிய ஆதரவை காங்கிரஸ் விலக்கி கொண்டது. தேர்தலை தவிர்க்க புதிய தலைமையிலான ஐக்கிய முன்னனி அரசை வெளியிலிருந்து ஆதரிக்க காங்கிரஸ் முன்வந்தது. அதன்படி  புதிய தலைமையின் கீழ் 1997 ஏப்ரல் 21 ல் குஜ்ரால் பிரதமராக பதவியேற்றார்.

1998ஆம் ஆண்டு நடந்த இந்தியாவின் 12வது நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சியும் தனிப்பெரும்பான்மை பெறவில்லை. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி உருவாகி அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமரானார்.

2004ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று, மன்மோகன் சிங் பிரதமர் ஆனார். இவரது தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசானது, 2004 முதல் 2014 ஆம் ஆண்டிற்கிடையிலான பத்தாண்டு காலம் ஆட்சியிலிருந்தது.

2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். இந்த அரசே காங்கிரஸ் அல்லாத முதல் தனித்த பெரும்பான்மை பெற்ற கட்சியின் அரசாகும்.

2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நடந்து முடிந்துள்ளன. மே 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. விரைவில் இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்பது தெரிய வரும்.

அதுவரை.. காத்திருப்போம்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com