உ.பி. அமைச்​ச​ர​வை​யி​லி​ருந்து ராஜ்​பர் நீக்​கம்

உத்​த​ரப் பிர​தேச மாநில அமைச்​ச​ர​வை​யி​லி​ருந்து, சுஹல்​தேவ் பார​திய சமாஜ் கட்சி​யின் தலை​வ​ரான ஓம் பிர​காஷ் ராஜ்​பர் திங்​கள்​கி​ழமை நீக்​கப்​பட்​டார்.
உ.பி. அமைச்​ச​ர​வை​யி​லி​ருந்து ராஜ்​பர் நீக்​கம்

உத்​த​ரப் பிர​தேச மாநில அமைச்​ச​ர​வை​யி​லி​ருந்து, சுஹல்​தேவ் பார​திய சமாஜ் கட்சி​யின் தலை​வ​ரான ஓம் பிர​காஷ் ராஜ்​பர் திங்​கள்​கி​ழமை நீக்​கப்​பட்​டார். முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத்​தின் பரிந்​து​ரையை ஏற்று, இதற்​கான உத்​த​ரவை மாநில ஆளு​நர் ராம் நாயக்  திங்​கள்​கி​ழமை பிறப்​பித்​தார்.
பாஜ​க​வின் கூட்டணி கட்சி​யான சுஹல்​தேவ் பார​திய சமாஜ், உத்​த​ரப் பிர​தே​சத்​தில் கடந்த 2017-இல் நடை​பெற்ற சட்டப் பேர​வைத் தேர்​த​லில் 4 இடங்​க​ளில் வெற்றி பெற்​றது. அக்​கட்​சி​யின் தலை​வ​ரான ஓம் பிர​காஷ் ராஜ்​பர்,  மாநில பிற்​ப​டுத்​தப்​பட்​டோர் நலன் மற்​றும் மாற்​றுத் திற​னா​ளி​கள் மேம்​பாட்​டுத் துறை அமைச்​ச​ராக பதவி வகித்து வந்​தார்.
அண்​மைக் கால​மாக, முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் மற்​றும் பாஜ​க​வுக்கு எதி​ராக கடு​மை​யான விமர்​ச​னங்​களை ராஜ்​பர் முன்​வைத்​தார். தனது கட்சியை வலு​வி​ழக்​கச் செய்​யும் நட​வ​டிக்​கை​க​ளில் பாஜக ஈடு​ப​டு​வ​தாக அவர் குற்​றம்​சாட்​டி​னார்.
மக்​க​ள​வைத் தேர்​த​லில் பாஜ​க​வின் சின்​னத்​தி​லேயே போட்டி​யி​டு​மாறு நிபந்​தனை விதிக்​கப்​பட்​ட​தால், தனித்து போட்டி​யி​டு​வ​தாக ராஜ்​பர் அறி​வித்​தார். பல்​வேறு தொகு​தி​க​ளுக்கு வேட்பா​ளர்​களை அறி​வித்​த​து​டன், சில தொகு​தி​க​ளில் காங்​கி​ர​ஸூக்​கும், பகு​ஜன்​ச​மாஜ்-​ச​மா​ஜ​வாதி கூட்ட​ணிக்​கும் ஆத​ர​வ​ளிப்​ப​தாக கூறி​னார். அண்​மை​யில் தேர்​தல் பிர​சா​ரத்​தில் பேசிய அவர், பாஜ​க​வி​னரை கால​ணி​க​ளால் தாக்க வேண்​டும் என்று கூறி​யது பெரும் சர்ச்​சையை ஏற்​ப​டுத்​தி​யது.
இந்த சூழ​லில், மாநில அமைச்​ச​ர​வை​யி​லி​ருந்து ஓம் பிர​காஷ் ராஜ்​பரை நீக்க வேண்​டு​மென ஆளு​நர் ராம் நாயக்​கிற்கு முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் திங்​கள்​கி​ழமை பரிந்​துரை செய்​தார். அதனை உட​ன​டி​யாக ஏற்​றுக் கொண்ட ஆளு​நர், மாநில பிற்​ப​டுத்​தப்​பட்​டோர் நலன் மற்​றும் மாற்​றுத் திற​னா​ளி​கள் மேம்​பாட்​டுத் துறை அமைச்​சர் பத​வி​யி​லி​ருந்து அவரை விடு​வித்​தார்.
இதே​போல், மாநில அமைச்​சர் அந்​தஸ்​தில் இருக்​கும் சுஹல்​தேவ் பார​திய சமாஜ் கட்சி​யின் இதர எம்​எல்​ஏக்​க​ளை​யும் அவர்​க​ளது பொறுப்​பு​க​ளில் இருந்து நீக்க வேண்​டும் என்ற பரிந்​து​ரை​யை​யும் ஆளு​நர் ஏற்​றுக் கொண்​டார்.
பாஜ​க கருத்து: சுஹல்​தேவ் பார​திய சமாஜ் கட்சி​யின் தலை​வர் ஓம் பிர​காஷ் ராஜ்​பர், கூட்டணி தர்​மத்தை சிதைத்​து​விட்​டார். என​வே​தான், கடு​மை​யான நட​வ​டிக்​கையை முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் மேற்​கொள்ள வேண்​டிய நிலை ஏற்​பட்​டது என்று பாஜக தலை​வர் மகேந்​திர நாத் பாண்டே தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com