ஒப்புகைச் சீட்டு எண்ணிக்கை பொருந்தாவிட்டால் அனைத்து ஒப்புகை சீட்டுகளையும் எண்ண வேண்டும்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள், வாக்கு ஒப்புகைச் சீட்டுகளுடன் பொருந்தாவிட்டால், அந்த தொகுதியில் உள்ள அனைத்து வாக்கு ஒப்புகைச் சீட்டுகளையும் எண்ண வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
ஒப்புகைச் சீட்டு எண்ணிக்கை பொருந்தாவிட்டால் அனைத்து ஒப்புகை சீட்டுகளையும் எண்ண வேண்டும்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள், வாக்கு ஒப்புகைச் சீட்டுகளுடன் பொருந்தாவிட்டால், அந்த தொகுதியில் உள்ள அனைத்து வாக்கு ஒப்புகைச் சீட்டுகளையும் எண்ண வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் சுட்டுரையில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில்,"மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரம் ஆகிய இரண்டிலும் உள்ள வாக்குகளின் எண்ணிக்கையை சரிபார்ப்பதற்கு தேர்தல் ஆணையம் ஒரு புதிய முறையை கண்டறிய வேண்டும்.  
வாக்கு எண்ணிக்கையின்போது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கையும், வாக்கு ஒப்புகைச் சீட்டுகளின் எண்ணிக்கையும் பொருந்தாவிட்டால், அந்த தொகுதியில் உள்ள அனைத்து வாக்கு ஒப்புகைச் சீட்டுகளையும் எண்ண வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
ஒவ்வொரு தொகுதியிலும், 50 சதவீத வாக்குச் சாவடிகளில், வாக்கு ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம், ஒவ்வொரு தொகுதியிலும்  ஒரு வாக்குச் சாவடிக்கு பதிலாக, 5 வாக்குச் சாவடிகளில் ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு கடந்த மாதம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை மறுஆய்வு செய்யுமாறு எதிர்க்கட்சிகள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இந்த மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது. 
அதையடுத்து, வாக்குகளை சரிபார்க்கும் முறையில் புதிய முறையை கொண்டு வர வேண்டும் என்று அனைத்து எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தியுள்ளன.
நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்ததையடுத்து, வரும் 23-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com