ஓமன் வெள்ளம்: 6 இந்தியர்கள் மாயம்

ஓமன் நாட்டில் நேரிட்ட திடீர் மழை வெள்ளத்தில் சிக்கி, அந்நாட்டுக்கு சுற்றுலா சென்றிருந்த 6 இந்தியர்கள் மாயமாகியுள்ளனர்.

ஓமன் நாட்டில் நேரிட்ட திடீர் மழை வெள்ளத்தில் சிக்கி, அந்நாட்டுக்கு சுற்றுலா சென்றிருந்த 6 இந்தியர்கள் மாயமாகியுள்ளனர்.
மகாராஷ்டிரத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் கைருல்லா கான். இவரது மகன் சர்தார் பைசல் அகமது, ஓமனில் 2 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், ஓமனில் உள்ள தனது மகனை காணவும், பிரபல சுற்றுலா தளமான வடி பானி காலித் எனுமிடத்தை சுற்றி பார்க்கவும், தனது மனைவி, மருமகள், 3 பேத்தி ஆகியோருடன் கைருல்லா கான் சென்றார்.
இந்நிலையில் வடி பானி காலித் பகுதியை பைசல் அகமது உள்ளிட்ட 7 பேரும் காரில் சுற்றி பார்த்து கொண்டிருக்கும்போது, அப்பகுதியில் திடீரென கன மழையும், அதைத் தொடர்ந்து வெள்ளமும் நேரிட்டுள்ளது.
அப்போது காரில் இருந்த பைசல் அகமதுவின் 4 வயது மகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். அவரை காப்பாற்றும் முயற்சியில் பைசல் அகமது உள்ளிட்ட 6 பேர் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக  அவர்கள் 6 பேரும் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டனர். அவர்களில் பைசல் அகமது மட்டும் மரக்கிளையை பிடித்து உயிர் தப்பினார். எஞ்சிய 6 பேரையும் காணவில்லை. அவர்களின் நிலை என்ன ஆனது? என்பதும் தெரியவில்லை.
இதுகுறித்த தகவலின்பேரில், மகாராஷ்டிரத்தில் வாழும் அவர்களது உறவினர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com