தில்​லி​யில் எதிர்க்​கட்​சித் தலை​வர்​கள் இன்று ஆலோ​சனை

மக்​க​ள​வைத் தேர்​தல் முடி​வு​கள், வரும் 23-ஆம் தேதி வெளி​யா​க​வுள்ள நிலை​யில், அர​சி​யல் சூழல் குறித்து விவா​திப்​ப​தற்​காக, தில்​லி​யில் எதிர்க்​கட்​சி​க​ளின் தலை​வர்​கள் பங்​கேற்​கும் ஆலோ​ச​னைக்
கொல்கத்தாவில்  மம்தா பானர்ஜியை அவரது இல்லத்தில் திங்கள்கிழமை சந்தித்த சந்திரபாபு நாயுடு.
கொல்கத்தாவில் மம்தா பானர்ஜியை அவரது இல்லத்தில் திங்கள்கிழமை சந்தித்த சந்திரபாபு நாயுடு.

மக்​க​ள​வைத் தேர்​தல் முடி​வு​கள், வரும் 23-ஆம் தேதி வெளி​யா​க​வுள்ள நிலை​யில், அர​சி​யல் சூழல் குறித்து விவா​திப்​ப​தற்​காக, தில்​லி​யில் எதிர்க்​கட்​சி​க​ளின் தலை​வர்​கள் பங்​கேற்​கும் ஆலோ​ச​னைக் கூட்டம் செவ்​வாய்க்​கி​ழமை நடை​பெ​ற​வுள்​ளது.
மக்​க​ள​வைத் தேர்​த​லில் பாஜக கூட்டணி ஆட்சி​ய​மைக்​கத் தேவை​யான பெரும்​பான்​மை​யைப் பெறத் தவ​றி​னால், ஆட்சி​ய​மைக்க உரிமை கோரும் வகை​யில், ஒரு கூட்ட​ணியை உரு​வாக்​கும் முயற்​சி​யில் ஆந்​திர முதல்​வர் சந்​தி​ர​பாபு நாயுடு ஈடு​பட்​டுள்​ளார். இதற்​காக, காங்​கி​ரஸ் மூத்த தலை​வர் சோனியா காந்தி உள்​பட பல்​வேறு எதிர்க்​கட்​சி​க​ளின் தலை​வர்​க​ளைச் சந்​தித்து ஆத​ரவு திரட்டி வரு​கி​றார்.
​மம்​தா​வு​டன் சந்​தி​ர​பாபு நாயுடு சந்​திப்​பு:​ இந்​நி​லை​யில், மேற்கு வங்க முதல்​வர் மம்தா பானர்​ஜியை அவர், கொல்​கத்​தா​வில் திங்​கள்​கி​ழமை சந்​தித்​துப் பேசி​னார். அப்​போது, காங்​கி​ர​ஸின் ஆத​ர​வு​டன் பிராந்​தி​யக் கட்சி​களை ஒருங்​கி​ணைத்து மத்​தி​யில் ஆட்சி​ய​மைப்​ப​தற்​கான சாத்​தி​யக் கூறு​கள் குறித்து அவர்​கள் விவா​தித்​தா​கக் கூறப்​ப​டு​கி​றது.
இந்​நி​லை​யில், மக்​க​ள​வைத் தேர்​தல் முடி​வு​கள், வரும் வியா​ழக்​கி​ழமை வெளி​யாக இருப்​ப​தால், அர​சி​யல் சூழல் குறித்து விவா​திப்​ப​தற்​காக, தில்​லி​யில் எதிர்க்​கட்​சித் தலை​வர்​கள் செவ்​வாய்க்​கி​ழமை சந்​தித்து ஆலோ​சனை நடத்​த​வுள்​ள​னர். இக்​கூட்​டத்​தில், காங்​கி​ரஸ், தெலுங்கு தேசம், இட​து​சாரி கட்சி​கள், பகு​ஜன் சமாஜ் கட்சி, தேசி​ய​வாத காங்​கி​ரஸ், திரி​ண​மூல் காங்​கி​ரஸ் உள்​ளிட்ட எதிர்க்​கட்​சி​க​ளின் தலை​வர்​கள் பங்​கேற்​க​வுள்​ள​னர். கூட்டத்​துக்​குப் பிறகு, எதிர்க்​கட்​சி​க​ளின் தலை​வர்​கள், தேர்​தல் ஆணைய அதி​கா​ரி​க​ளைச் சந்​திக்​க​வுள்​ள​னர்.
உச்​ச​நீ​தி​மன்ற உத்​த​ர​வுப்​படி, ஒவ்​வொரு சட்டப் பேர​வைத் தொகு​தி​யி​லும் ஏதா​வது 5 வாக்​குச்​சா​வ​டி​க​ளில், வாக்கு ஒப்​பு​கைச் சீட்டு​க​ளு​டன் மின்​னணு வாக்​குப்​ப​திவு இயந்​தி​ரத்​தில் பதி​வான வாக்​கு​களை சரி​பார்க்க வேண்​டும்.
இந்​நி​லை​யில், ஒரு சட்டப் பேர​வைத் தொகு​தி​யில் ஏதா​வது ஒரு வாக்​குச்​சா​வ​டி​யில் குள​று​படி நடந்​தது கண்​ட​றி​யப்​பட்​டால், அந்​தத் தொகு​தி​யில்  பதி​வான அனைத்து வாக்​கு​க​ளை​யும், வாக்கு ஒப்​பு​கைச் சீட்டு​டன் எண்ணி சரி​பார்க்க வேண்​டும் என்று  தேர்​தல் ஆணைய அதி​கா​ரி​களிடம்  எதிர்க் கட்சி​க​ளின் தலை​வர்​கள் வலியுறுத்தவுள்​ள​னர்.
​வாக்​குப்​ப​திவு இயந்​தி​ரங்​க​ளில் முறை​கே​டு?:​ மின்​னணு வாக்​குப்​ப​திவு இயந்​தி​ரங்​க​ளில் முறை​கேடு செய்​யப்​பட்​டுள்​ள​தாக சந்​தே​கம் எழுந்​துள்​ளது என்று சந்​தி​ர​பாபு நாடு கூறி​னார். இது​கு​றித்து அவர் மேலும் கூறி​ய​தா​வது: தில்​லி​யில் வாக்​குப்​ப​திவு இயந்​தி​ரங்​க​ளும், கட்டுப்​பாட்டு இயந்​தி​ரங்​க​ளும் மாற்​றப்​பட்​டுள்​ள​தா​கத் தக​வல்​கள் வெளி​யா​கி​யுள்​ளன. சில இடங்​க​ளில் வெளி​யில் இருந்த அலை​வ​ரி​சை​யைப் பயன்​ப​டுத்தி, வாக்​குப்​ப​திவு இயந்​தி​ரங்​க​ளில் பதி​வான தக​வல்​களை மாற்​றி​விட்​ட​தா​கக் கூறப்​ப​டு​கி​றது. எனவே,  வாக்​குப்​ப​திவு இயந்​தி​ரங்​க​ளைப் பாது​காப்​பது குறித்து அனைத்து கட்சி​க​ளும் தீவி​ர​மாக யோசித்து வரு​கின்​றன. ரூ.9,000 கோடி செல​வில் வாக்கு ஒப்​பு​கைச் சீட்டு இயந்​தி​ரங்​கள் வாங்​கப்​பட்​டுள்​ளன. இது ஆடம்​ப​ரச் செல​வு​தானே.
வாக்கு ஒப்​பு​கைச் சீட்டு​களை எண்ணி ஒப்​பிட்​டால், தேர்​தல் முடி​வு​கள் வெளி​யாக 6 மணி நேரம் தாம​த​மா​கும் என்று கூறு​கி​றார்​கள். 72 நாள்​க​ளாக காத்​தி​ருந்த நமக்கு மேலும் 2-3 நாள்​கள் காத்​தி​ருக்க முடி​யாதா? தொலை​பே​சி​யில் ஒட்டுக்​கேட்​பது போல், மின்​னணு வாக்​குப்​ப​திவு இயந்​தி​ரங்​க​ளில் முறை​கேடு செய்ய முடி​யும். எனவே, வாக்கு எண்​ணிக்கை சரி​யாக நடை​பெற ஒரே வழி, வாக்​குப்​ப​திவு இயந்​தி​ரங்​க​ளில் பதி​வான வாக்​கு​க​ளை​யும், வாக்கு ஒப்​பு​கைச் சீட்டு​க​ளை​யும் எண்ணி சரி​பார்ப்​ப​து​தான் என்​றார் அ​வர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com