நமோ தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுத்தம்

பாஜக நிதியுதவியின்கீழ் தொடங்கப்பட்ட நமோ தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டு விட்டது.

பாஜக நிதியுதவியின்கீழ் தொடங்கப்பட்ட நமோ தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டு விட்டது.
மக்களவைத் தேர்தலின்போது பிரதமர் நரேந்திர மோடியின் தேர்தல் பிரசாரங்கள் மற்றும் பாஜக சம்பந்தப்பட்ட தேர்தல் தொடர்பான பிற செய்திகளை ஒளிபரப்புவதற்கு நமோ தொலைக்காட்சி தொடங்கப்பட்டது. 
தேர்தல் காலத்தில் இந்த தொலைக்காட்சி தொடங்கப்பட்டதற்கு, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இது தேர்தல் நடத்தை நெறிமுறை மீறல் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. நமோ தொலைக்காட்சிக்கு தில்லி தலைமை தேர்தல் அதிகாரியும் தேர்தல் நடத்தை நெறிமுறை மீறல் தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். இதனால் சர்ச்சை ஏற்பட்டது. 
இதனிடையே, மக்களவை இறுதிக்கட்ட தேர்தல் 19ஆம் தேதி நடைபெற்றது. அதற்கான தேர்தல் பிரசாரம் 17ஆம் தேதி மாலையுடன் நிறைவடைந்தது. அன்றைய தினத்திலேயே நமோ தொலைக்காட்சியின் ஒளிபரப்பும் நிறுத்தப்பட்டு விட்டது. 
இதுகுறித்து பாஜக நிர்வாகி ஒருவர் கூறுகையில், "மக்களவைத் தேர்தலில் பாஜக பிரசாரத்துக்காகவே நமோ தொலைக்காட்சி தொடங்கப்பட்டது. தேர்தல் முடிந்து விட்டதால், அந்த தொலைக்காட்சி இனி தேவையில்லை. ஆதலால் 17ஆம் தேதியிலிருந்து தனது ஒளிபரப்பை நமோ தொலைக்காட்சி நிறுத்தி கொண்டு விட்டது' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com