பாஜக ஆதரவு நிறுவனங்களால் எடுக்கப்பட்ட வாக்குக் கணிப்புகள்: இந்திய கம்யூனிஸ்ட் விமர்சனம்

பாஜக தலைமையிலான கூட்டணிதான் மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று பெரும்பாலான வாக்குக் கணிப்பு முடிவுகள் கூறியுள்ள நிலையில், இவை அனைத்தும், பாஜக ஆதரவு நிறுவனங்கள் மற்றும் செய்தித் தொலைக்காட்சி
பாஜக ஆதரவு நிறுவனங்களால் எடுக்கப்பட்ட வாக்குக் கணிப்புகள்: இந்திய கம்யூனிஸ்ட் விமர்சனம்

பாஜக தலைமையிலான கூட்டணிதான் மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று பெரும்பாலான வாக்குக் கணிப்பு முடிவுகள் கூறியுள்ள நிலையில், இவை அனைத்தும், பாஜக ஆதரவு நிறுவனங்கள் மற்றும் செய்தித் தொலைக்காட்சி சேனல்களால் மேற்கொள்ளப்பட்டவை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது.
ஹைதராபாதில் திங்கள்கிழமை பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எஸ்.சுதாகர் ரெட்டி இது தொடர்பாக கூறியதாவது:
வாக்குக் கணிப்பு முடிவுகளை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஏனெனில், வாக்குக் கணிப்பில் ஈடுபட்ட பெரும்பாலான நிறுவனங்களும், செய்தி தொலைக்காட்சி சேனல்களும் பாஜகவுக்கு ஆதரவானவை. இதுவும் பாஜகவின் ஒரு தேர்தல் உத்திதான். 
எனவே, வாக்குக் கணிப்பு முடிவுகள் இவ்வாறுதான் வரும் என்பது ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்டது. தொடக்கத்தில் இருந்தே தங்களுக்கு ஆதரவான தொலைக்காட்சி சேனல்கள் மூலம் நாட்டில் தங்களுக்கு பெரும் ஆதரவு உள்ளது போன்ற தோற்றத்தை பாஜக உருவாக்கி வந்தது.
எனது கணிப்புப்படி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 200-க்கும் குறைவான இடங்களில்தான் வெற்றி கிடைக்கும்.
இப்போது, பாஜக கூட்டணியில் இல்லாத கட்சிகள், தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இணையும். இதன் மூலம் மத்தியில் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com