பாஜக கூட்டணித் தலை​வர்​கள் தில்லியில் இன்று சந்​திப்பு

​மத்​தி​யில் மீண்​டும் பாஜக கூட்டணி ஆட்சி​ய​மைக்​கும் என்று பெரும்​பா​லான வாக்கு கணிப்​பு​கள் தெரி​வித்​துள்ள நிலை​யில், அந்த கூட்ட​ணி​யைச் சேர்ந்த தலை​வர்​க​ளின் ஆலோ​ச​னைக் கூட்டம், தில்​லி​யில் செவ்
பாஜக கூட்டணித் தலை​வர்​கள் தில்லியில் இன்று சந்​திப்பு

​மத்​தி​யில் மீண்​டும் பாஜக கூட்டணி ஆட்சி​ய​மைக்​கும் என்று பெரும்​பா​லான வாக்கு கணிப்​பு​கள் தெரி​வித்​துள்ள நிலை​யில், அந்த கூட்ட​ணி​யைச் சேர்ந்த தலை​வர்​க​ளின் ஆலோ​ச​னைக் கூட்டம், தில்​லி​யில் செவ்​வாய்க்​கி​ழமை நடை​பெ​ற​வுள்​ளது.
பிர​த​மர் நரேந்​திர மோடி பங்​கேற்​கும் இந்​தச் சந்​திப்​பில், பிகார் முதல்​வ​ரும், ஐக்​கிய ஜனதா தளம் தலை​வ​ரு​மான நிதீஷ் குமார், சிவ​சேனை கட்சி​யின் தலை​வர் உத்​தவ் தாக்​கரே, லோக் ஜன​சக்தி கட்சி​யின் தலை​வர் ராம் விலாஸ் பாஸ்​வான் உள்​ளிட்​டோர் பங்​கேற்க இருப்​ப​தா​கத் தக​வல்​கள் இருக்​கின்​றன. 
மக்​க​ள​வைத் தேர்​த​லுக்​கான இறு​திக் கட்ட வாக்​குப்​ப​திவு ஞாயிற்​றுக்​கி​ழமை முடி​வ​டைந்​த​தும், பல்​வேறு செய்​தித் தொலைக்​காட்​சி​கள் வாக்கு கணிப்பு முடி​வு​களை வெளி​யிட்​டன. அவற்​றில் பெரும்​பா​லா​னவை, மத்​தி​யில் மீண்​டும் பாஜக ஆட்சி​ய​மை​யும் என்று தெரி​வித்​துள்​ளன. இத​னால், பாஜக மற்​றும் அதன் கூட்ட​ணிக் கட்சி​க​ளின் தலை​வர்​கள் மகிழ்ச்​சி​யில் உள்​ள​னர்.
இதை​ய​டுத்து, தேசிய ஜன​நா​ய​கக் கூட்ட​ணி​யைச் சேர்ந்த தலை​வர்​க​ளுக்கு பாஜக தேசி​யத் தலை​வர் அமித் ஷா, செவ்​வாய்க்​கி​ழமை விருந்து நிகழ்ச்​சிக்கு ஏற்​பாடு செய்​துள்​ளார். 
இந்த விருந்து நிகழ்​வின்​போது, கூட்ட​ணியை மேலும் வலுப்​ப​டுத்​து​வது குறித்து அவர்​கள் ஆலோ​சனை நடத்​து​வார்​கள் என்று தக​வல்​கள் தெரி​விக்​கின்​றன.
இந்த விருந்து நிகழ்​வுக்கு முன்​ன​தாக, பாஜ​க​வைச் சேர்ந்த முக்​கி​யத் தலை​வர்​க​ளின் ஆலோ​ச​னைக் கூட்டம், தில்​லி​யில் உள்ள பாஜக தலை​மை​ய​கத்​தில் நடை​பெ​ற​வுள்​ளது. இதில், அடுத்​தக்​கட்ட நட​வ​டிக்​கை​கள் குறித்து அவர்​கள் ஆலோ​சனை நடத்த இருப்​ப​தா​கத் தக​வல்​கள் தெரி​விக்​கின்​றன.
தமிழக முதல்​வர், துணை முதல்​வர் பங்கேற்பு: பாஜக தலை​மை​யி​லான தேசிய ஜன​நா​ய​கக் கூட்டணி ஆலோ​ச​னைக் கூட்டத்​தில் பங்​கேற்​ப​தற்​காக தமி​ழக முதல்​வர் எடப்​பாடி கே.ப​ழ​னி​சாமி, துணை முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம் ஆகி​யோர் செவ்​வாய்க்​கி​ழமை தில்லி வருகை தரு​கின்​ற​னர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com