ம.பி. காங்​கி​ரஸ் அர​சுக்கு நெருக்​கடி: சிறப்​புக் கூட்டம் நடத்த வலி​யு​றுத்தி ஆளு​ந​ருக்கு பாஜக கடி​தம்

மத்​தி​யப் பிர​தே​சத்​தில் முதல்​வர் கமல்​நாத் தலை​மை​யி​லான காங்​கி​ரஸ் அரசு, சட்டப் பேர​வை​யில் பெரும்​பான்​மையை நிரூ​பிக்க வேண்​டும் என்று அந்த மாநி​லத்​தில் பலம் பொருந்​திய எதிர்க்​கட்​சி​யாக உள்ள பாஜக வலி​யு​றுத்​தி​யுள்
ம.பி. காங்​கி​ரஸ் அர​சுக்கு நெருக்​கடி: சிறப்​புக் கூட்டம் நடத்த வலி​யு​றுத்தி ஆளு​ந​ருக்கு பாஜக கடி​தம்

மத்​தி​யப் பிர​தே​சத்​தில் முதல்​வர் கமல்​நாத் தலை​மை​யி​லான காங்​கி​ரஸ் அரசு, சட்டப் பேர​வை​யில் பெரும்​பான்​மையை நிரூ​பிக்க வேண்​டும் என்று அந்த மாநி​லத்​தில் பலம் பொருந்​திய எதிர்க்​கட்​சி​யாக உள்ள பாஜக வலி​யு​றுத்​தி​யுள்​ளது. இதற்கு ஏது​வாக, சிறப்பு சட்டப் பேர​வைக் கூட்டத் தொடரை விரை​வில் கூட்ட வலி​யு​றுத்தி, ஆளு​நர் ஆனந்​தி​பென் படே​லுக்கு பாஜக திங்​கள்​கி​ழமை கடி​தம் எழு​தி​யது.
மே 23-இல் மக்​க​ள​வைத் தேர்​தல் முடி​வு​கள் வெளி​யா​க​வுள்ள நிலை​யில், பாஜ​க​வின் இந்த நகர்வு மாநில அர​சி​ய​லில் பர​ப​ரப்பை ஏற்​ப​டுத்​தி​யுள்​ளது.
​ஆட்​சிக்கு வந்த காங்​கி​ரஸ்​: 230 உறுப்​பி​னர்​க​ளைக் கொண்ட மத்​தி​யப் பிர​தேச சட்டப் பேர​வைக்கு கடந்த ஆண்டு நவம்​ப​ரில் தேர்​தல் நடை​பெற்​றது. இதில், 114 இடங்​க​ளில் காங்​கி​ர​ஸூம், 109 இடங்​க​ளில் பாஜ​க​வும் வெற்றி பெற்​றன. 2 தொகு​தி​க​ளில் பகு​ஜன் சமாஜ், ஓரி​டத்​தில் சமா​ஜ​வாதி, 4 இடங்​க​ளில் சுயேச்சை வேட்பா​ளர்​கள் வெற்றி பெற்​ற​னர்.
பெரும்​பான்​மைக்கு மேலும் 2 இடங்​கள் தேவை என்ற நிலை​யில், பகு​ஜன் சமாஜ், சமா​ஜ​வாதி கட்சி​க​ளின் ஆத​ர​வு​டன் காங்​கி​ரஸ் ஆட்சி​ய​மைத்​தது. முதல்​வ​ராக கமல்​நாத் பத​வி​யேற்​றார். இதன் மூலம், அந்த மாநி​லத்​தில் 15 ஆண்டு கால பாஜக ஆட்சி முடி​வுக்கு வந்​தது.
​ஆ​ளு​ந​ருக்கு கடி​தம்: ​இந்​நி​லை​யில்​, ​மத்​தி​யப் பிர​தே​சத்​தில் வலு​வற்ற காங்​கி​ரஸ் அரசு பொறுப்​பேற்​ற​தில் இருந்து, மாநில மக்​கள் பல்​வேறு பிரச்​னை​களை எதிர்​கொண்​டுள்​ள​தாக கூறி, மாநில ஆளு​நர் ஆனந்​தி​பென் படே​லுக்கு பாஜக திங்​கள்​கி​ழமை கடி​தம் எழு​தி​யது. சட்டப் பேரவை எதிர்க்​கட்​சித் தலை​வர் கோபால் பார்​கவா எழு​தி​யி​ருக்​கும் அக்​க​டி​தத்​தில், "காங்​கி​ரஸ் அர​சின் நிலைத்​தன்மை தொடர்​பாக பல்​வேறு குழப்​பங்​கள் நில​வு​கின்​றன. எனவே, சட்டப் பேர​வை​யில் காங்​கி​ரஸ் அரசு பெரும்​பான்​மையை நிரூ​பிக்க வேண்​டும். இதற்​கா​க​வும், மாநி​லத்​தில் நில​வும் முக்​கி​யப் பிரச்​னை​கள் குறித்து விவா​திப்​ப​தற்​கா​க​வும் பேரவை சிறப்​புக் கூட்டத்தை விரை​வில் கூட்ட வேண்​டும்' என்று வலி​யு​றுத்​தப்​பட்​டுள்​ளது.
இது​தொ​டர்​பாக அவர் பிடிஐ செய்​தி​யா​ள​ரி​டம் கூறு​கை​யில், "சட்டப் பேர​வை​யில் விவா​தத்​தின்​போது வாக்​கெ​டுப்பு கோரப்​ப​டும். அதில் அரசு தோல்​வி​யு​றும்​பட்​சத்​தில், காங்​கி​ரஸ் அரசு கவி​ழும்' என்​றார்.
​பு​திய உற்​சா​கம்​: நடை​பெற்று முடிந்த மக்​க​ள​வைத் தேர்​த​லில் பாஜக  கூட்டணி மீண்​டும் ஆட்சி​ய​மைக்​கும் என்று பல்​வேறு வாக்​குக் கணிப்பு முடி​வு​கள் தெரி​வித்​துள்​ளன. மேலும், மத்​தி​யப் பிர​தே​சத்​தில் உள்ள 29 மக்​க​ள​வைத் தொகு​தி​க​ளில் 25 இடங்​களை பாஜக கைப்​பற்​றும் என்று கூறப்​பட்​டுள்​ளது. இது, பாஜ​க​வி​ன​ருக்கு புதிய உற்​சா​கத்தை அளித்​துள்​ளது. 
மக்​க​ள​வைத் தேர்​த​லில் பகு​ஜன் சமாஜ் வேட்பா​ள​ராக அறி​விக்​கப்​பட்​டி​ருந்த லோகேந்​திர சிங் ராஜ்​புத், கடந்த மாதம் அக்​கட்​சி​யி​லி​ருந்து விலகி காங்​கி​ரஸ் மூத்த தலை​வர் ஜோதி​ரா​தித்ய சிந்​தி​யா​வுக்கு ஆத​ரவு தெரி​வித்து, காங்கிரஸில் இணை​ந்தார். 
இத​னால் ஆத்​தி​ர​ம​டைந்த பகு​ஜன் சமாஜ் தலை​வர் மாயா​வதி,   காங்​கி​ரஸ் அர​சுக்​கான ஆத​ரவை மறு​ஆய்வு செய்​வேன் என்று கூறி​னார். எனி​னும், அந்​தப் பிரச்​னைக்கு சுமு​க​மாக தீர்வு காணப்​பட்​ட​தாக, முதல்​வர் கமல்​நாத் பின்​னர் தெரி​வித்​தார். 

பெ​ரும்​பான்​மையை நிரூ​பிக்கத் தயார்: கமல்நாத்

சட்டப் பேர​வை​யில் பெரும்​பான்​மையை நிரூ​பிக்க தயா​ராக இருப்​ப​தாக முதல்​வர் கமல்​நாத் தெரி​வித்​துள்​ளார்.
இது​தொ​டர்​பாக அவர் கூறு​கை​யில், "நாங்​கள் ஆட்சிக்கு வந்த முதல் நாளில் இருந்து, எங்​க​ளுக்கு இடை​யூறு ஏற்​ப​டுத்த பாஜக முயன்று கொண்​டி​ருக்​கி​றது. இது​வரை 4 முறை பெரும்​பான்​மையை நிரூ​பித்​தி​ருக்​கி​றோம். அவர்​கள் மீண்​டும் விரும்​பி​னால், மீண்​டும் பெரும்​பான்​மையை நிரூ​பிப்​போம்' என்​றார்.
காங்​கி​ரஸ் பொதுச் செய​லா​ள​ரும், மத்​தி​யப் பிர​தேச பொறுப்​பா​ள​ரு​மான தீபக் பாப​ரியா கூறு​கை​யில், "முறை​கே​டான வழி​க​ளைப் பயன்​ப​டுத்தி, காங்​கி​ரஸ் அரசை சீர்​கு​லைக்க பாஜக முயற்​சிக்​கி​றது. சட்டப் பேர​வைத் தேர்​த​லில் பாஜ​கவை மக்​கள் நிரா​க​ரித்​து​விட்​ட​னர். அது மக்​கள் அளித்த தீர்ப்பு. அதனை மாற்ற முயன்​றால், மக்​கள் மன்​னிக்க மாட்டார்​கள்' என்​றார்.

​அ​மைச்​ச​ர​வையை விரி​வாக்க முடி​வு?

மாநில அரசை வலுப்​ப​டுத்​தும் வகை​யில், பகு​ஜன் சமாஜ், சமா​ஜ​வாதி எம்​எல்​ஏக்​க​ளுக்கு அமைச்​சர் பதவி வழங்க கமல்​நாத் திட்ட​மிட்​டுள்​ள​தா​கத் தெரி​கி​றது. மேலும், சுயேச்சை எம்​எல்ஏ ஒரு​வ​ருக்​கும் அமைச்​சர் பதவி வழங்​கப்​பட வாய்ப்​புள்​ள​தாக காங்​கி​ரஸ் வட்டா​ரங்​கள் கூறு​கின்​ற​ன. மத்​தி​யப் பிர​தே​சத்​தில் தற்​போது 25 அமைச்​சர்​கள் உள்ள நிலை​யில், அமைச்​ச​ர​வை​யில் மேலும் 9 பேரை இணைக்க முடி​யும். இத​னால், மாநில அமைச்​ச​ரவை விரை​வில் விரி​வாக்​கம் செய்​யப்​பட வாய்ப்​புள்​ள​தாக கூறப்​ப​டு​கி​றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com