ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: சுஷ்மா ஸ்வராஜ் இன்று பங்கேற்பு

கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக்கில் 2 நாள் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் செவ்வாய்க்கிழமை(மே 21) பங்கேற்கிறார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: சுஷ்மா ஸ்வராஜ் இன்று பங்கேற்பு

கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கேக்கில் 2 நாள் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் செவ்வாய்க்கிழமை(மே 21) பங்கேற்கிறார். இதுதொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்த ஆண்டுக்கான ஷாங்காய் ஒத்துழைப்பு வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மாநாடு மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் பிஷ்கேக்கில் நடைபெறுகிறது. அதில் இந்தியா சார்பில் அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பங்கேற்கவுள்ளார். அந்த மாநாட்டில், பிராந்திய மற்றும் சர்வதேச அளவில் உள்ள பிரச்னைகள் குறித்து அவர் விவாதிக்க உள்ளார். அது தவிர ஜூன் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்தியா சார்பில் முன்னெடுக்க வேண்டிய பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்யவுள்ளார்.
இந்த மாநாட்டின் இடையே, கிர்கிஸ்தான் அதிபர் சூரன்போய் ஜீன்பெகோவை சந்தித்து இரு நாடுகளுக்கிடையே உள்ள உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ரஷியா, சீனா, கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் அதிபர்கள் இணைந்து ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பை கடந்த 2001-ஆம் ஆண்டு தொடங்கினர். பிராந்திய பாதுகாப்பு,  ஒத்துழைப்பு, மற்றும் பிரச்னைகள் ஆகியவற்றை இந்த அமைப்பில் உள்ள  நாடுகள் இணைந்து எதிர்கொள்ளும். இந்த அமைப்பில் கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் இந்தியா பார்வையாளராக இருந்தது. 
இந்நிலையில், கடந்த 2017-ஆம் ஆண்டு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உறுப்பு நாடுகளாக இணைந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com