சுடச்சுட

  

  ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து கட்டுப்பாடு முழுவதும் வாபஸ்: 27ஆம் தேதி முதல் அமல்

  By DIN  |   Published on : 22nd May 2019 02:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  ஜம்மு-ஸ்ரீநகர் இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்களின் வாகனப் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடு முழுவதையும் வரும் 27ஆம் தேதி முதல் வாபஸ் பெறுவது என்று அந்த மாநிலத்தில் நடைபெறும் ஆளுநர் தலைமையிலான அரசு நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
  புல்வாமாவில் சிஆர்பிஎஃப் வீரர்களின் வாகனங்களை குறிவைத்து பயங்கரவாதி ஒருவர் தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்தியதைத் தொடர்ந்து, ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் பொதுமக்களின் வாகனப் போக்குவரத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இதேபோல், பாரமுல்லா-உதம்பூர் இடையேயான நெடுஞ்சாலை, ஸ்ரீநகர்-பாரமுல்லா நெடுஞ்சாலை, ஸ்ரீநகர்-உதம்பூர் நெடுஞ்சாலை ஆகியவற்றிலும் போக்குவரத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. 
  நெடுஞ்சாலையில் பாதுகாப்புப் படை வாகனங்கள் பயங்கரவாதிகளின் அச்சுறுத்தல் இல்லாமல் எளிதில் பயணிக்க ஏதுவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
  இருப்பினும், ஸ்ரீநகர்-பாரமுல்லா, ஸ்ரீநகர்-உதம்பூர் சாலையில் போக்குவரத்து கட்டுபாடு தளர்த்தப்பட்டது. இந்நிலையில், ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் பொதுமக்களின் வாகன போக்குவரத்துக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடு முழுவதையும் விலக்கி கொள்வது என்று ஆளுநர் தலைமையிலான அரசு நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், அனைத்து பாதுகாப்பு அமைப்புகள், சிவில் மற்றும் காவல்துறை நிர்வாகத்துடன், அமர்நாத் யாத்திரை ஏற்பாடு குறித்தும், மாநில பாதுகாப்பு நிலவரம் குறித்தும் ஆளுநர் ஆய்வு நடத்தினார். இதையடுத்து, நெடுஞ்சாலையில் வரும் 27ஆம் தேதி முதல் பொதுமக்களின் வாகன போக்குவரத்துக்கு கட்டுப்பாடு எதுவும் விதிக்கப்பட கூடாது என உத்தரவிட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai