சுடச்சுட

  

  பிகானீர் பாலியல் வன்கொடுமை வழக்கை விரைவுபடுத்த வேண்டும்: என்சிடபிள்யூ

  By DIN  |   Published on : 22nd May 2019 01:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  ராஜஸ்தானில் உள்ள பிகானீர் நகரத்தில் பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை  செய்யப்பட்ட வழக்கை  போலீஸார் விரைந்து விசாரிக்க வேண்டும் என டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் (என்சிடபிள்யூ) உத்தரவிட்டுள்ளது.
  இதுகுறித்து என்சிடபிள்யூ தலைவர் ரேகா சர்மா ராஜஸ்தான் மாநில டிஜிபி கபில் கார்க்குக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:
  கடந்த மே 15-ஆம் தேதி திருமணமான பெண் ஒருவர் காட்டிற்கு விறகு சேகரிக்க சென்றிருந்தபோது மூன்று நபர்களால் கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். அவரது கணவருடன் சென்று புகார் கொடுத்த போதும் இந்த விவகாரம் ஊடகங்களில் மே 20-ஆம் தேதிதான் வெளியாகியுள்ளது. இது, என்சிடபிள்யூவை ஆழமாக பாதித்துள்ளது.
  ராஜஸ்தான் மாநிலத்தில் அண்மைக் காலமாக பெண்களுக்கு எதிரான கொடூரமான குற்றங்கள் மிகவும் அதிகரித்து வருகின்றன. எனவே,  பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்து இந்த விவகாரத்தில் துரித கதியில் விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொணர வேண்டும் என்று அந்த கடிதத்தில் ரேகா சர்மா தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai