சுடச்சுட

  

  மக்களவைத் தேர்தல்: நாளை வாக்கு எண்ணிக்கை: ஏற்பாடுகள் தீவிரம்

  By DIN  |   Published on : 22nd May 2019 03:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  vote-machine

  மக்களவைக்கு 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 23ஆம் தேதி எண்ணப்படுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது.
  மக்களவையில் உள்ள 542 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி தொடங்கி, இம்மாதம் 19ஆம் தேதி வரை  7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தின் வேலூர் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
  மக்களவைத் தேர்தலை மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலும்,   காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் போட்டியிட்டன.
  இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி வரும் 23ஆம் தேதி நடைபெறுகிறது. முதலில் தபால் வாக்குகளும், அதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படவுள்ளன. இதையொட்டி, மின்னணு  வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அனைத்து மையங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கைக்கான பணிகளை தேர்தல் ஆணையமும் தீவிரமாக செய்து வருகிறது.
  முடிவுகள் தாமதமாகும்?: வழக்கமாக தேர்தல் முடிவுகள், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில் மாலைக்குள் ஏறத்தாழ தெரிந்து விடும். ஆனால் இந்தத் தேர்தலில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் வாக்கு ஒப்புகைச்சீட்டுகளும் எண்ணப்படுவதால் அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியாவது 5 மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரை தாமதம் ஆகும் என கூறப்படுகிறது. இதனால் 23ஆம் தேதி இரவு 10 மணிக்கு பிறகே முடிவுகள் வெளியாகலாம் என்றும் தெரிகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai