மக்களவைத் தேர்தல் முடிவுகள்: 78 தொகுதிகளில் கடுமையான போட்டி நிலவும் என்று கணிப்பு

17-வது மக்களவைத் தேர்தல் முடிவுகள் நாளை (வியாழக்கிழமை) வெளியாகிறது. 
மக்களவைத் தேர்தல் முடிவுகள்: 78 தொகுதிகளில் கடுமையான போட்டி நிலவும் என்று கணிப்பு


17-வது மக்களவைத் தேர்தல் முடிவுகள் நாளை (வியாழக்கிழமை) வெளியாகிறது. 

இதில் 78 தொகுதிகளில் கடுமையான போட்டி நிலவும் என்று இந்தியா டுடே-ஆக்ஸிஸ் மை இந்தியா கணித்துள்ளது. இந்த 78 தொகுதிகளில் வெற்றி, தோல்விக்கு இடையிலான வாக்கு வித்தியாசதம் 3 சதவீதத்துக்கும் குறைவாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அந்த 78 தொகுதிகளில் 37 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலையில் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. அந்த 37 தொகுதிகளில் 33 தொகுதிகள் பாஜகவை உள்ளடக்கியுள்ளது. 

ஐக்கிய முற்போக்கு கூட்டணி 17 இடங்களில் முன்னிலை வகிக்கும் என்று தெரிகிறது. அதில் 14 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி உள்ளடங்கியுள்ளது.

3 சதவீதத்துக்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் பிராந்தியக் கட்சிகள் 16 இடங்களில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதில் உத்தரப் பிரதேசத்தின் மெகா கூட்டணியான சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் - ராஷ்ட்ரிய லோக் தளம் ஒன்றாகும். மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் 5 இடங்களில் 3 சதவீதத்துக்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறலாம். ஆந்திர மாநிலத்தில் 3 தொகுதிகள் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் தெலங்கானாவில் 1 தொகுதியில் தெலங்கானா ராஷ்ட்ர சமிதியும் இதுபோல் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று தெரிகிறது.    

இதோடு, மிகவும் குறைந்த வித்தியாசத்தில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் தொகுதிகளாக 8 தொகுதிகள் உள்ளது. இந்த 8 தொகுதிகளில் எந்த கட்சி தோல்வியை சந்திக்கும் என்பது கணிப்பது கடினம் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com