ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து வந்தவர்களுக்கு தனித் தொகுதி ஒதுக்கீடு : ஜம்மு-காஷ்மீர் பாஜக வலியுறுத்தல்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து இடம் பெயர்ந்து வந்தவர்கள் போட்டியிடுவதற்கு வசதியாக ஜம்மு-காஷ்மீரில் தொகுதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அந்த மாநில பாஜக வலியுறுத்தியுள்ளது.


பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து இடம் பெயர்ந்து வந்தவர்கள் போட்டியிடுவதற்கு வசதியாக ஜம்மு-காஷ்மீரில் தொகுதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அந்த மாநில பாஜக வலியுறுத்தியுள்ளது.
ஜம்முவில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய மாநில பாஜக தலைமைச் செய்தித் தொடர்பாளர் சுனில் சேத்தி இது தொடர்பாக கூறியதாவது:
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து இந்தியாவுக்கு வந்த சுமார் 20 முதல் 25 லட்சம் பேர், ஜம்மு பிராந்தியத்தில் சுமார் 70 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு ஜம்மு-காஷ்மீரில் உரிய பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் அவர்கள் மட்டும் போட்டியிடும் வகையில் 25 தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும். பாகிஸ்தான் மற்றும் சீனாவால் நமது பிராந்தியம் ஆக்கிரமிக்கப்பட்டது. அவர்களது ஆதிக்கத்தில் இருக்க முடியாது என்ற காரணத்தால், அங்கிருந்து வந்த மக்களுக்கு நாம் உரிய முக்கியத்துவம் அளிப்பது அவசியம். எனவேதான் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளோம். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து வந்தவர்களுக்கு நாம் உரிய நீதியை வழங்கியாக வேண்டும். அதற்கான சரியான சூழ்நிலை இப்போது ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு என்று தனி தொகுதி ஒதுக்கப்படும்போது, தங்களுக்கான பிரதிநிதிகளை அவர்களே தேர்வு செய்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.
பாகிஸ்தான், சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் அந்நாடுகளிடம் இருந்து மீட்கப்படும் வரை இந்த வாய்ப்பை அந்த மக்களுக்கு அளிக்க வேண்டும். இதேபோல அவர்களுக்கென தனி நாடாளுமன்றத் தொகுதியும் ஒதுக்கப்பட வேண்டும். தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை கடந்த பல ஆண்டுகளாக அவர்கள் மெளனமாக சகித்து வருகின்றனர். 
இந்த தொகுதி ஒதுக்கீடு மூலம், அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கான கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரம் தொடர்பான அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com