பேரிடர் சூழல்களை ரிசாட்- 2 பி செயற்கைக்கோள் கண்காணிக்கும்: இஸ்ரோ தகவல்

 ரிசார்ட் - 2 பி செயற்கைக்கோள் மூலமாக வேளாண் நிலப் பரப்புகள், வனம் மற்றும் பேரிடர் சூழல்களை கண்காணிக்க முடியும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது.
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து ரிசாட்-2பி செயற்கைக்கோளுடன்  விண்ணில் செலுத்த தயார்நிலையில்  பிஎஸ்எல்வி-சி46 ராக்கெட்
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவண் விண்வெளி மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து ரிசாட்-2பி செயற்கைக்கோளுடன்  விண்ணில் செலுத்த தயார்நிலையில்  பிஎஸ்எல்வி-சி46 ராக்கெட்


 ரிசார்ட் - 2 பி செயற்கைக்கோள் மூலமாக வேளாண் நிலப் பரப்புகள், வனம் மற்றும் பேரிடர் சூழல்களை கண்காணிக்க முடியும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது.

பிஎஸ்எல்வி - சி46 ராக்கெட் மூலமாக அந்தச் செயற்கைக்கோள் புதன்கிழமை (மே 22) அதிகாலை 5.30 மணிக்கு ஏவப்படுகிறது. முன்னதாக, அதற்கான  25 மணி நேர கவுன்ட் டவுன் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு தொடங்கியது. அதற்கு நடுவே எரிபொருள் நிரப்பும் பணிகளும் நிறைவடைந்தன. 
நிகழாண்டில் இஸ்ரோ சார்பில் விண்ணில் செலுத்தப்படும் 3-ஆவது ராக்கெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.
 இஸ்ரோவால் வடிவமைக்கப்பட்ட ரிசாட் 2-பி செயற்கைக்கோளானது 615 கிலோ எடை கொண்டது.
ரேடார் தொழில்நுட்பத்தில் புவிப் பரப்பை படம் எடுக்கும் பணிகளில் அந்த செயற்கைக்கோள் ஈடுபடுத்தப்பட உள்ளது. அதன் ஆயுள்காலம் 5 ஆண்டுகள் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ரிசாட் 2-பி செயற்கைக்கோளில் உயர்தொழில்நுட்பத்திலான அதி நவீன  இமேஜிங் சாதனம் உள்ளது. அதன் வாயிலாக, புவியின் கீழ்ப்பரப்பில் உள்ளவற்றை மிகத் துல்லியமாக அறிந்து கொள்ள முடியும்.
அதைக் கருத்தில் கொண்டு, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, வேளாண்மை, வனச் சூழல், பேரிடர் மேலாண்மை ஆகிய பயன்பாட்டுக்காக அந்த செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படுகிறது.
பிஎஸ்எல்வி சி-46 ராக்கெட் மூலம் செலுத்தப்படும் ரிசாட் 2-பி  செயற்கைக்கோளானது 557 கிலோ மீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்படும். 
இதற்கு முன்னதாக, கடந்த 2009-இல் ரிசாட் 2 செயற்கைக்கோளும், 2012-இல் ரிசாட் 1 செயற்கைக்கோளும் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆயிரம் பேருக்கு வாய்ப்பு: இஸ்ரோ சார்பில் அனுப்பப்படும் செயற்கைக்கோள்களை பொதுமக்கள் நேரடியாகக் காணும் வசதி அண்மையில் ஏற்படுத்தப்பட்டது. இதற்காக திறந்தவெளி அரங்கு ஒன்றும் கட்டப்பட்டது. 
சுமார் 5 ஆயிரம் பேர் வரை அமரக் கூடிய அந்த அரங்கில் இருந்து பிஎஸ்எல்வி சி-46 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படுவதைப் பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. 
அதற்கான ஆன்லைன் முன்பதிவு அண்மையில் தொடங்கியது. அதன் வாயிலாக, முன்பதிவு செய்த ஆயிரம் பேர் பிஎஸ்எல்வி சி-46 ராக்கெட் ஏவப்படுவதை நேரில் பார்த்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com