சுடச்சுட

  

  அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கு:இடைத்தரகருக்கு எதிராக துணைக் குற்றப்பத்திரிகை தாக்கல்

  By DIN  |   Published on : 23rd May 2019 01:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


  அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்த முறைகேடு விவகாரத்தில், இடைத்தரகராகச் செயல்பட்டதாகக் கருதப்படும் சுஷேன் மோகன் குப்தாவுக்கு எதிராக தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் துணைக் குற்றப்பத்திரிகையை அமலாக்கத் துறை புதன்கிழமை தாக்கல் செய்தது.
  தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி அரவிந்த் குமார் முன்னிலையில் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
  அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தில் பணப் பரிமாற்றம் தொடர்பான ஆவணங்களை குப்தா வைத்திருப்பதாக அலாக்கத் துறை சந்தேகிக்கிறது.
  இத்தாலியைச் சேர்ந்த அகஸ்டாவெஸ்ட் லேண்ட் நிறுவனத்திடமிருந்து ரூ.3,600 கோடி மதிப்புக்கு ஹெலிகாப்டர்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் இடைத்தரகராக செயல்பட்டதாக ராஜீவ் சக்சேனா மீது அமலாக்கத் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து அவர், அண்மையில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். அவர் தில்லி வந்தடைந்ததும், அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த விவகாரத்தில் குப்தாவுக்கும் தொடர்பு இருப்பது அமலாக்கத் துறையினருக்குத் தெரியவந்தது. அதன் அடிப்படையில் மீது குப்தாவை கருப்புப் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையினர் கைது செய்தனர்.
  அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஒப்பந்தத்திலும், பிற ஹெலிகாப்டர் ஒப்பந்தங்களிலும் குப்தாவுக்குத் தொடர்பு இருப்பதை நிரூபிப்பதற்குப் போதிய ஆதாரங்கள் உள்ளன என்று நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தெரிவித்திருந்தது.
  இந்த விவகாரம் தொடர்பாக, நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையுடன், குப்தா பயன்படுத்திய சில மின்னஞ்சல் முகவரி பற்றிய விவரங்கள், சில கணினி உபகரணங்கள் ஆகியவற்றையும் அமலாக்கத் துறையினர் அளித்தனர்.
  ஜாமீன் மனு: இதனிடையே, குப்தாவின் ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றம், வியாழக்கிழமை (மே 23) விசாரிக்கவுள்ளது. அன்றைய தினம், அமலாக்கத் துறையின் துணை குற்றப்பத்திரிகையை நீதிபதி பரிசீலிக்கவுள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai